Published:Updated:

`ரெட் ஸோனில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள்; ஆரஞ்சு ஸோனில் 24!’ -ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டுமே தளர்வு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்ட்ரல் ரயில் நிலையம் - சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் - சென்னை

மத்திய சுகாதாரத் துறையின் தரவுகளின்படி தமிழகத்தில் ரெட் ஸோனில் 12 மாவட்டங்களும் ஆரஞ்சு ஸோனில் 24 மாவட்டங்களும் க்ரீன் ஸோனில் ஒரு மாவட்டமும் இருக்கின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் இருக்கும் ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர், தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதேநேரம், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், நாடு முழுவதும் பாதிப்புகள் அடிப்படையில் மாவட்டவாரியாக சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி வருபவர்களின் வாகனங்களை  பறிமுதல் செய்த போலீஸ்
ஊரடங்கு உத்தரவை மீறி வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸ்

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதல்கள் தொடர்பான கடிதத்தில், பாதிப்புகள் அடிப்படையில் மாவட்டவாரியாக நாடு முழுவதும் பிரிக்கப்பட்டுள்ள மண்டலங்கள் தொடர்பான தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அதன்படி தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலத்திலும் இருக்கின்றன.

அமெரிக்கா பணக்காரர்களின் நாடல்ல! - கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்

சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள்

சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம்.

ஊரடங்கு காலங்களில் மண்டபம் பகுதியில் சிலிண்டர் வினியோகம் செய்கின்றனர்.
ஊரடங்கு காலங்களில் மண்டபம் பகுதியில் சிலிண்டர் வினியோகம் செய்கின்றனர்.

ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள்

தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி.

பச்சை மண்டலம்

கிருஷ்ணகிரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பட்டியலில் இருக்கும் மாவட்டங்களைப் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு மாநிலங்கள் சிவப்பு மண்டல மாவட்டங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதேநேரம், மத்திய அரசு சிவப்பு மண்டலமாகக் குறிப்பிட்ட மாவட்டத்தை மற்ற மண்டலங்களில் மாற்ற முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது. வாராந்திர அடிப்படையில் இந்தப் பட்டியலில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு, கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஊரடங்கு
ஊரடங்கு
AP | Mahesh Kumar A

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படியான பகுதிகளில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சோதனைச் சாவடிகள், மருத்துவ அவசரம் தவிர மற்ற போக்குவரத்துகளைத் தடை செய்வது, வீடு வீடாகச் சோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு