Published:Updated:

``10 லட்சம் மரங்கள் இலக்கு; இதுவரை 6 லட்சம் நட்டிருக்கிறோம்!" - அமைச்சர் கே.என். நேரு

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு, மியாவாக்கி முறையில் குறுங்காடு நடவு செய்யப்பட்டு வளர்ந்துள்ளது. அதாவது, குறைவான இடத்தில், காடுகளை உருவாக்கும் ஒரு முறைதான் மியாவாக்கி.

இந்திய நகர்ப்புறங்கள் பசுமைப் போர்வையை இழந்துகொண்டிருப்பதால், கடந்த 20 ஆண்டுகளில் நகர மக்கள் அதீத வெப்பத்தைச் சந்திக்கின்றனர். இந்த அதீத வெப்பத்துக்குக் காரணமான பசுமை இல்ல வாயு வெளியீடும் கட்டுப்பாடற்றுச் செல்வதால், புவி வெப்ப மயமாதலும் தீவிரமடைந்து வருகிறது.

மியாவாக்கி காடு
மியாவாக்கி காடு
மியாவாகி மரம் வளர்ப்பு முறை தமிழ்நாட்டுக்கு ஏற்றதுதானா? - வனக்கல்லூரி முதல்வர் சொல்வது என்ன?

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றக் குழுவினுடைய உடன்படிக்கையில், இந்திய நிலப்பரப்பில் 33 சதவிகிதத்துக்குக் காடுகளை உருவாக்குவதாக இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு கானக அளவை நிறுவனக் கணக்கெடுப்பின்படி இந்திய நிலப்பரப்பில் காடுகளின் மொத்த பரப்பளவு 24 சதவிகிதம் உள்ளது. இந்நிலையில், மீதம் 9 சதவிகித நிலப்பரப்பைக் காட்டு நிலமாக மாற்றுவதில், மியாவாக்கி காடு வளர்ப்பு முறை பெரும் உதவியாக இருக்குமென்று மரம் வளர்ப்பில் ஈடுபடும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடு நடவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, குறைவான இடத்தில், காடுகளை உருவாக்கும் ஒரு முறைதான் மியாவாக்கி.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

குப்பைகள், கழிவுகளை வைத்தே காட்டை உருவாக்குவதுதான் இதன் வழிமுறை. ஆழமான குழிகளை வெட்டி அதில், குப்பைகளைப் போட்டு நெருக்கமாகச் செடிகளை நடும் முறை தான். இதில், மக்கள் நடைபாதை பயிற்சிக்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

அப்போது, பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, ``அரசு சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டது. இதுவரை, ஆறு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்னும், நான்கு லட்சம் கன்றுகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நட்டு விடுவார்கள்.

அமைச்சர் கே.என். நேரு
அமைச்சர் கே.என். நேரு

இதன்மூலம் பசுமையான மாநகரமாகத் திருச்சி திகழ இருக்கிறது” என்று அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ``திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்தப்படுமா?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ``1994-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி திருச்சி, ஸ்ரீரங்கம், பொன்மலை ஆகிய நகராட்சிகள் மற்றும் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து 60 வார்டுகளுடன் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 2011-ல் திருவெறும்பூர் பேரூராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டு, வார்டுகள் எண்ணிக்கை 60-லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது.

கே.என் நேரு
கே.என் நேரு
திருச்சி மாம்பழச் சாலை: குடியரசுத் தலைவர் முதல் சினிமா பிரபலங்கள் வரை - தித்திக்கும் மாம்பழ விற்பனை!

அதுமட்டுமல்லாமல், மேலும் `திருச்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுமா' என்று மாவட்ட மக்களிடையே கேள்வி எழுந்து வருகிறது. தற்போது திருச்சி மாநகராட்சி 167 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. இன்னும் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 325 சதுர கிலோ மீட்டருக்கும் மேலாக விரிவடையும். இதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, வரும் தமிழகச் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது வெளியாகவுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு