Published:Updated:

`மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பவர்களுக்கு தமிழக அரசின் பசுமை விருது!' - சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவிப்பு

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்

``தைல மரங்களை அகற்றிவிட்டு, மாற்றாக நாட்டு மரங்களைப் பயிரிட்டு மாவட்டத்தின் வனப்பகுதியை அதிகரிப்பதோடு, மழைப்பொழிவு அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்".

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த கிராமமான புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மறமடக்கி பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் எனப் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு அங்குள்ள தன்னாங்குளக்கரையில் புங்கை, வேம்பு, அரசமரம், ஆலமரம் என மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்
`மொதல்ல நான் விவசாயி; அப்புறம்தான் எம்.எல்.ஏ!'- நடவுப்பணியை தொடங்கிய மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், ``தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் வனப்பகுதிகளாக மாற்றும் வகையிலும், தமிழக முதல்வர் பசுமைக்குழு அமைக்க உத்தரவிட்டார். பசுமைக்குழுவின் தலைவராக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் தலைவராகப் பொறுப்பேற்று அதிலே பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து பசுமைக் குழு ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில்தான், வனத்துறை அமைச்சர் மற்றும் பசுமைக்குழு தலைவரிடமும் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.

அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 25,000 ஏக்கர் பரப்பளவில் தைலமரங்கள், பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களால் மாவட்டத்தில் பெய்கின்ற மழை அளவு முற்றிலுமாகக் குறைந்துவிட்டது.

இந்தத் தைல மரங்களை அகற்றிவிட்டு, மாற்றாக நாட்டு மரங்களைப் பயிரிட்டு மாவட்டத்தின் வனப்பகுதியை அதிகரிப்பதோடு, மழைப்பொழிவு அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்

உடனடியாக என் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வனத்துறை அமைச்சர் மற்றும் பசுமைக்குழு தலைவர், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்தே ஆய்வுப் பணியைத் தொடங்கி அதை விரைவில் செயல்படுத்துவதாகக் கூறினர். அந்த அடிப்படையிலேயே ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட எனது சொந்த கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு அடர்வனமாக மாற்றும் முயற்சியில் கிராம மக்கள் எல்லாருமே ஈடுபட்டிருக்கின்றனர்.

மரங்களை நடவு செய்வதை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து தமிழகத்தைப் பசுமை மாநிலமாக்குவதே முதலமைச்சரின் நோக்கம். தனியார் அமைப்புகள், தனி மனிதர்கள் பலரும் தன்னார்வமாக மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் முதல்வர் பசுமை விருது வழங்கிக் கௌரவிக்க உள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு