Published:Updated:

அடிதடிக்கு ரூ.2,000; லாட்டரி விற்பனைக்கு ரூ.1 லட்சம்!-லஞ்சப் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த காவல்துறை

சட்டவிரோதச் செயல்களுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று பட்டியல் போட்டு எச்சரித்திருக்கிறது காவல்துறை.

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், சேலம் போலீஸ் எஸ்.பி ஶ்ரீ அபிநவ் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் முதல் கஞ்சா, லாட்டரி, மது, சூது,

போலீஸ்
போலீஸ்
போலீஸ் எஸ்.ஐ டு செம்மர பிசினஸ்... தொழிலதிபர் மூசா கடத்தப்பட்டது ஏன்?

கட்டப்பஞ்சாயத்து போன்ற விவகாரங்களுக்கு காவல் நிலைய ரைட்டர், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், ஸ்பெஷல் பிராஞ்ச், நெடுஞ்சாலைப் பணியில் இருப்பவர்கள் வாங்கும் லஞ்சம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பணம் சம்பந்தமான விசாரணைகளுக்கு ரைட்டர்கள் ரூ.1,000 வரை லஞ்சம் வாங்குவதாகவும், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, புகையிலைப் பொருள்கள், மணல் கடத்தல் விவகாரங்களில் ரூ.2,000 முதல் ரூ.30,000 வரை எஸ்.ஐ-கள் லஞ்சம் வாங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே சட்டவிரோதச் செயல்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாகக் கூறியுள்ளனர். ``இனி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல டி.ஜி.பி தரப்பிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழக காவல் துறையில், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எந்தெந்தச் சட்ட விரோதச் செயல்களுக்கு, எவ்வளவு லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்து சுற்றரிக்கை அனுப்பியிருக்கிறா சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ்! ஊழலை ஒழிக்கப் போராடும் அவர்களுக்கு பாராட்டுகள்.வெளிப்படையான முயற்சிக்கும் வாழ்த்துகள்!

எச்சரிக்கை
எச்சரிக்கை

அதே சமயத்தில் உள்துறையை நிர்வகித்துவரும் தமிழக முதல்வர் இதுகுறித்து என்ன பதில் சொல்வார்... திமுக., ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக காவல்துறையில் ஊழல் மலிந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு