Published:Updated:

பத்திரிகையாளர்கள் இருவருக்குக் கொரோனா தொற்று! - தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு பாசிடிவ்

கொரோனா
News
கொரோனா

தமிழகத்தில் முதன்முறையாக பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா ஹாட்ஸ்பாட்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,000-த்தைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்திருக்கிறது. அதேநேரம், 365 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். கொரோனாவால் தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மத்திய அரசு வரும் 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாகக் கூறி, அதற்கான வழிமுறைகளை வெளியிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு சார்பில் இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்துள்ளது. அந்த குழுவின் அறிக்கை வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் மாநில அரசு அறிவிக்கும் வரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், தமிழக தினசரி நாளிதழ் ஒன்றில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் திருவல்லிக்கேணி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி

மேலும், குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மற்றொருவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மேல் நடவடிக்கைகள் தொடரும். மற்றொரு பத்திரிக்கையாளர் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர் என்று தெரியவந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றொருவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.