Published:Updated:

`களத்தில் நிற்கும் பணியாளர்கள் 5,000 பேருக்கு 1,50,000 முட்டைகள்!' -கரூரில் தொடங்கி வைத்த அமைச்சர்

முட்டைகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முட்டைகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சொந்தச் செலவில் 50,000 முட்டைகளும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டியின் சார்பில் 1 லட்சம் முட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் தடுப்பு பணியில் களத்தில் நின்று பணியாற்றும் 5,000 நபர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் வகையில், 1,50,000 முட்டைகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கியிருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

முட்டைகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முட்டைகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் மக்களை காப்பதற்காக களத்தில் அயராது பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக செய்தியாளர்களுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்கும் வகையில் முட்டைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

`பசியால் துடிப்பது என்னைத் தூங்கவிடல!' -செருப்பு தைக்கும் தொழிலாளிகளை நெகிழவைத்த உதவி ஆய்வாளர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பொதுமக்கள் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

உதவிகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
உதவிகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயலின் ஒரு பகுதியாக, வரும் மே 3 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்களுக்கு அனைத்து விதமான அத்தியாவசியப் பொருள்களும் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப்பொருள்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்று பரவல் தடுப்புப் பணியில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து களத்தில் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் என முதற்கட்டமாக 5,000 நபர்களுக்கு அவரகளின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் வகையில், முட்டைகள் வழங்கும் பணியினை எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

உதவிகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
உதவிகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிகளின் பணியாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் என ஒரு நபருக்கு தலா 30 முட்டைகள் வீதம் முதற்கட்டமாக 5,000 நபர்களுக்கு 1,50,000 முட்டைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சொந்தச் செலவில் 50,000 முட்டைகளும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டியின் சார்பில் 1 லட்சம் முட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு