Published:Updated:

125 நாள்களுக்குப்‌ பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்; மகிழ்ச்சியில் பயணிகள், சிறு வியாபாரிகள்!

125 நாள்களுக்குப்‌பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்
125 நாள்களுக்குப்‌பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்

மக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து 3-ம் அலையைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.

மலைகளின் அரசியான நீலகிரிக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்துச் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் இரண்டாவது ஆண்டாக சுற்றுலாத்துறை முடக்கப்பட்டதால், பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் இரண்டாவது ஆண்டாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.

125 நாள்களுக்குப்‌பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்
125 நாள்களுக்குப்‌பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்
``இந்த மரங்கதான் ஊர் அடையாளம்; வெட்டவிட மாட்டோம்!" - இரட்டை மரத்திற்காக மக்களின் குரல்

கொரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலாவுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு மாதங்களாக முடங்கிக்கிடந்த சுற்றுலா தலங்களுக்கு, தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் 125 நாள்களுக்குப் பின் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் இன்று காலை திறக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி படகு இல்லம், பைக்காரா அருவி, பைக்காரா படகு இல்லம் போன்றவையும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். ஊட்டியில் நிலவும் மழையையும் பொருட்படுத்தாது படகு சவாரி செய்தும், பூங்காக்களை கண்டு ரசித்தும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 4 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த சுற்றுலா சார்ந்த சிறு வியாபாரிகள், வணிகர்கள் உற்சாகத்துடன் கடை விரித்துள்ளனர்.

125 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்
125 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்
கொடநாடு காட்சிமுனை: அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள்; கண்டுகொள்ளாத வனத்துறை!

இதுகுறித்துப் பேசிய சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி தேவா, ``கொரோனா ஊரடங்கால ரெண்டு வருஷமா வெளிய எங்கேயும் போகல. டூர் போக ஃபிரண்ட்ஸ் எல்லாம் பிளான் பண்ணிட்டு இருந்தோம். இப்போ ஊட்டிக்கு வந்தோம். இன்னைக்குத்தான் கார்டன் எல்லாம் ஓப்பன் பண்ணியிருக்காங்க. ரிலாக்ஸ்டா இருக்கு" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா வாயிலில் 38 ஆண்டுகளாகத் தள்ளுவண்டியில் கடை நடத்திவரும் பத்ருநிஷா, ``நாலஞ்சு மாசமா வருமானம் இல்லாம தவிச்சிட்டோம். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். இந்த அறிவிப்பு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடையத் திறந்துருக்கோம். இனி எங்களுக்கு கஷ்டம் தீர்ந்து நல்லது நடக்கும்னு நம்புறோம்" என்றார்.

125 நாள்களுக்குப்‌ பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்
125 நாள்களுக்குப்‌ பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்

கொரோனா காரணமாக நான்கு மாதங்களாக முடங்கிக் கிடந்த சுற்றுலாத்துறைக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து 3 -ம் அலையைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு