Published:Updated:

`நீங்கள் ஏன் மாஸ்க் அணியவில்லை..?!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்திய தஞ்சை காவலர்

காவலர் குணசேகர்
காவலர் குணசேகர்

இன்றைக்கு மட்டுமல்ல கொரோனா கட்டுக்குள் வரும் வரை இதைச் செய்யுங்கள்” என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அறிவுறுத்தினார் அந்தக் காவலர்.

தஞ்சாவூரில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், `முகக் கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது.. நாமும் நம்மால் பிறரும் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது. இது நம் கையில்தான் உள்ளது' என விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அன்பாக அறிவுறுத்தினார். இதனால் பலரும் அவரைப் பாராட்டிச் சென்றனர்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக சுய ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்ட து. இதனால் தஞ்சாவூர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆற்றுப்பாலம் டிராஃபிக் சிக்னல் அருகே வழக்கம் போல் பணியில் இருந்தார் போக்குவரத்து காவலர் குணசேகர்.

அப்போது முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பலர் சென்றனர். இதைக் கவனித்த குணசேகரன் அவர்களை வழிமறித்து, `ஏன் மாஸ்க் அணியவில்லை... தற்போது எங்கும் கொரோனா பரவி வருகிறது. இதைத் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நமக்குக் கொரோனா பாதிப்பு வராது என நினைப்பது தவறு. நம்மை நாம் காத்து கொள்ளவே சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன் அவசியத்தை உணர்ந்து நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். எனவே முகக் கவசம் அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல கொரோனா கட்டுக்குள் வரும் வரை இதைச் செய்யுங்கள்” என விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அறிவுறுத்தினார்.

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

இதேபோல் எப்போதும் சானிடைஸர் வைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் கையில் ஸ்பிரே செய்வதுடன் இதைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அன்பாக அறிவுறுத்தினார் குணசேகர். போக்குவரத்துக் காவலரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி விட்டுச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு