Published:Updated:

தண்டவாளத்தில் உறங்கிய போதை ஆசாமி; பிரேக் போட்டு நின்ற பயணிகள் ரயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை ரயில் தண்டவாளத்தில் தூக்கம் போட்ட இளைஞர்
கோவை ரயில் தண்டவாளத்தில் தூக்கம் போட்ட இளைஞர்

கோவை துடியலூர் அருகே குடிபோதையில் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தூங்க, பயணிகள் ரயில் அவரைக் கடந்து சென்று நின்றிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை – மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் இயங்கிவருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்து பணி செய்பவர்கள், மாணவர்கள் பலரும் அந்த ரயிலில்தான் வருவார்கள். நேற்று மாலை 6 மணியளவில் அந்தப் பயணிகள் ரயில், கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்தது.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்
அமைச்சர் வருகைக்கு அதிகாரியை அழைத்து ஆலோசித்தாரா திமுக நிர்வாகி?! - கோவை சர்ச்சை

துடியலூர் – பெரியநாயக்கன்பாளையம் இடையே சென்றபோது ரயில் திடீரென்று நிறுத்தப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டதன் காரணம் புரியாமல் மக்கள் பதற்றத்துடன் கீழே இறங்கிப் பார்த்தனர்.

பொதுவாக, ரயில் முன்பு பாய்ந்து யாராவது தற்கொலை செய்தாலோ, விலங்குகள் அடிபட்டாலோ மட்டுமே ரயிலை திடீரென்று பிரேக் பிடித்து நிறுத்துவார்கள். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்ஜின் டிரைவர், பொதுமக்கள் உள்ளிட்ட சிலர் ரயிலின் கீழே பார்த்திருக்கிறார்கள்.

தூங்கிய நபரை எழுப்பும் காட்சி
தூங்கிய நபரை எழுப்பும் காட்சி

அப்போது அங்கே ஒருவர் தண்டவாளத்தில் கையை முட்டுக் கொடுத்து தலையை வைத்து உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார். பயணிகள் பலரும் ரயிலுக்கு அடியே குனிந்து அந்த நபரை எழுப்பிவிட்டிருக்கிறார்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நபர் தூக்கக் கலக்கத்தில் அப்படியே உருண்டு சென்றார். விசாரணையில் அவர் குடிபோதையில் தண்டவாளத்தில் உறங்கியது தெரியவந்திருக்கிறது. ரயில் இன்ஜின் டிரைவர் சற்று தூரத்துக்கு முன்பு அவரைப் பார்த்துவிட்டு ஹாரன் அடித்திருக்கிறார். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. ரயிலை நிறுத்த முயன்றபோது, சில பெட்டிகள் அந்த நபரைக் கடந்து சென்ற பின்னர்தான் நின்றது.

தண்டவாளத்திலிருந்து உருண்டபடி செல்லும் குடிமகன்
தண்டவாளத்திலிருந்து உருண்டபடி செல்லும் குடிமகன்

அதிர்ஷ்டவசமாக அந்த நபர் காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். அதிகாரிகள் அந்த நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் அந்த ரயில் சற்று தாமதமாக மேட்டுப்பாளையம் சென்றடைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு