Published:Updated:

ஆசீர்வாதம் செய்வது போல நடித்து பணம் பறிப்பு - கோவையில் திருநங்கை கைது!

திருநங்கை கைது

கோவையில் ஆசீர்வாதம் செய்வது போல ஓர் ஆணிடம் பணம் பறித்துச் சென்று திருநங்கை கைது செய்யப்பட்டார். ஆசீர்வாதம் செய்வதுபோல அருகே வந்து, பர்ஸைபறித்து அதில் இருந்து ரூ.8,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டார்.

ஆசீர்வாதம் செய்வது போல நடித்து பணம் பறிப்பு - கோவையில் திருநங்கை கைது!

கோவையில் ஆசீர்வாதம் செய்வது போல ஓர் ஆணிடம் பணம் பறித்துச் சென்று திருநங்கை கைது செய்யப்பட்டார். ஆசீர்வாதம் செய்வதுபோல அருகே வந்து, பர்ஸைபறித்து அதில் இருந்து ரூ.8,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டார்.

Published:Updated:
திருநங்கை கைது

கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜி.ஆர்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

கோவை
கோவை

அப்போது, கொடிசியா அருகே மூன்று திருநங்கைகள் சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். அதில் ஒரு திருநங்கை, பிரதீப்பின் கார் அருகே வர, தன் பர்ஸில் இருந்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து ஆசீர்வாதம் செய்வதுபோல அருகே வந்த அந்த திருநங்கை, பிரதீப்பின் பர்ஸைப் பறித்து அதில் இருந்து ரூ.8,000 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டார். நடந்தது என்னவென்று புரியாமல் இருந்த பிரதீப்புக்கு, இந்த அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் எடுத்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில், பிரதீப் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், பிரதீப்பிடம் பணம் பறித்தது கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை இளவஞ்சி என்று தெரியவந்தது.

பணம்
பணம்

உடனடியாக இளவஞ்சியைக் கைது செய்த போலீஸ், அவரிடம் இருந்து ரூ.3,000 மீட்டனர். கடந்த வாரம் துடியலூர் அருகே ஓர் ஆண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 திருநங்கைகள் கைது செய்யப்பட்டார்கள்.

திருநங்கைகள் பலரும் சுயதொழில், வேலைக்குச் சென்று சாதித்து வருகின்றனர். விதிவிலக்காக ஒருசில திருநங்கைகள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.