Published:Updated:

"உங்களை மேடையில காட்டுறதே பெரிய விஷயம்னு சொல்லுவாங்க!" - திருநங்கை நேஹா

திருநங்கை நேஹா

'ஒரு திருநங்கையை அப்படியே திருநங்கையாக ஏற்றுக்கொள்வதில் இந்த மீடியாவிற்கு நிறைய பிரச்னை இருக்கு. பிளஸ் சைஸ், டஸ்க்கி, கருப்புன்னு மாடலிங் ஃபீல்டுக்குள் பொண்ணுங்களையே நுழைய அனுமதிக்க மாட்டாங்க. அந்த துறையில் ஏதோ ஒரு வகையில் பாரபட்சம் இருந்துட்டே இருக்கு!'

"உங்களை மேடையில காட்டுறதே பெரிய விஷயம்னு சொல்லுவாங்க!" - திருநங்கை நேஹா

'ஒரு திருநங்கையை அப்படியே திருநங்கையாக ஏற்றுக்கொள்வதில் இந்த மீடியாவிற்கு நிறைய பிரச்னை இருக்கு. பிளஸ் சைஸ், டஸ்க்கி, கருப்புன்னு மாடலிங் ஃபீல்டுக்குள் பொண்ணுங்களையே நுழைய அனுமதிக்க மாட்டாங்க. அந்த துறையில் ஏதோ ஒரு வகையில் பாரபட்சம் இருந்துட்டே இருக்கு!'

Published:Updated:
திருநங்கை நேஹா

திருநங்கைகள், திருநம்பிகள் தொடர்ந்து புறக்கணிப்புகளை வெவ்வேறு வடிவில் எதரிகொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அவர்களுடைய உரிமையை, கனவை அடைவதற்காக போராடிக்கொண்டே இருக்கின்றனர். அந்தப் போராட்டத்திற்கு உடனடி தீர்வானது என்றைக்குமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அது ஒரு பயணமாகவே தொடர்கிறது. மாடலிங் துறையில் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் நாமும் சாதிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அவ்வளவு எளிதில் அந்த மேடை வாய்க்கப்பெறுவதில்லை. அதில் என்ன சிக்கல் உள்ளது? என்ன மாதிரியான பிரச்னைகளை அந்தத் துறையில் அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நடிகையும், மாடலுமான திருநங்கை நேஹாவிடம் பேசினோம்.

நேஹா
நேஹா
Kalai Krishna makeup studio Aravind, Shree photography

"ஒரு திருநங்கையை அப்படியே திருநங்கையாக ஏற்றுக் கொள்வதில் இந்த மீடியாவிற்கு நிறைய பிரச்னை இருக்கு. பிளஸ் சைஸ், டஸ்க்கி, கருப்புன்னு மாடலிங் ஃபீல்டுக்குள் பொண்ணுங்களையே நுழைய அனுமதிக்க மாட்டாங்க. அந்த துறையில் ஏதோ ஒரு வகையில் பாரபட்சம் இருந்துட்டே இருக்கு. கடைக்கோடியில் இருக்கிற திருநங்கை மாடலிங் துறைக்குள் போகணும்னு ஆசைப்பட்டாலும் அவங்களால அந்தத் துறைக்குள் போக முடியாது. இன்னமும் அந்த ஃபேஷன் துறை எல்லாருக்குமானதாக இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிப்படையாகவே எங்களை இன்னும் கொஞ்சம் பொண்ணு மாதிரி உடல் அமைப்பை சரி செய்ய சொல்லுவாங்க. பொண்ணுங்ககூட எங்களை கம்பேர் பண்றாங்க. பெண்ணுக்கு உண்டான உடல் அமைப்பை தான் எங்ககிட்ட தேடுறாங்க. திருநங்கை உடல் வித்தியாசமானது. அதை புரிஞ்சுகிட்டு இயற்கையை இயற்கையாகவே ஏத்துக்க யாரும் இல்ல. பாடி ஷேமிங் என்கிற விஷயம் நேரடியாகவே எங்களுக்கு நடக்கறதால எங்களால சுலபமா அந்தத் துறைக்குள் நுழைய முடியல.

நேஹா
நேஹா
Kalai Krishna makeup studio Aravind, Shree photography

திருநங்கைகளின் உடல் தனித்துவமானது. அதை அப்படியே ஏத்துக்கிறதுதான் சிறந்தது. இப்பதான் ஆக்டிங் துறையிலும், மாடலிங் துறையிலும் நாங்க ஓரளவுக்கு கால் எடுத்து வைக்க ஆரம்பிச்சியிருக்கோம். பொதுவாகவே திருநங்கைகளுக்கு அழகுணர்ச்சி என்பது அதிகமாகவே இருக்கும். கலையையும், திருநங்கைகளையையும் எப்பவுமே பிரிக்கமுடியாது. இந்தத் துறையை விரும்பிப் போகிறவங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுது. அப்படியே அவங்களே கூப்பிட்டாலும் நார்மலா ஒரு மாடலுக்கு கொடுக்கிற மரியாதையும், சம்பளத்தையும் கொடுக்க மாட்டாங்க. ஏன்னு கேட்டா... 'உங்களை நாங்க காட்டுறோம்.. காட்டுறதே பெரிய விஷயம்... அதுதான் எங்களால் பண்ண முடியும்' ன்னு சொல்லுவாங்க. 

இந்த ஃபேஷன் துறை உள்ளே இருக்கிற அரசியலையும் உடைச்சிட்டு திருநங்கைகளும் அங்கே இருக்கணும்! ஏன்னா, ஏற்கெனவே ஃபேஷன் துறைல சாதாரண மக்களால் நுழைய முடியாது என்கிற எண்ணம் இப்பதான் படிப்படியாக குறைய ஆரம்பிச்சிருக்கு. பிளஸ் சைஸ் மாடல், டஸ்கி ஸ்கின் டோன் மாடல்னு போராடி அந்தத் துறைக்குள் வருகிற பொண்ணுங்க வரிசையில் கடைசியா நாங்களும் நின்னுட்டு இருக்கிறோம். எங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும் என்பது தான் எங்களுடைய ஒற்றை கோரிக்கை. சமீபத்தில் நானும், என் நண்பர்களும் சேர்ந்து திருவண்ணாமலையில் 'Kalai Krishna makeup studio

நேஹா
நேஹா
Kalai Krishna makeup studio Aravind, Shree photography

Aravind, Shree photography' அவங்களோடு சேர்ந்து பிரைடல் ஃபோட்டோஷூட் பண்ணிக்கிட்டோம்.  இதற்கு பிறகாவது எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் என்பதை எல்லாரும் புரிஞ்சுகிட்டாலே போதும். வாய்ப்பு கிடைச்சா மாடலிங் துறையில் சாதிக்க நாங்க தயாராக இருக்கோம்!'  என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism