Published:Updated:

`அப்போ காசு கேட்டு கடை வாசல்ல நின்னோம்; இப்ப நாங்களே கடை வச்சிட்டோம்!'- திருநங்கைகள் தொடங்கிய உணவகம்

``இங்க 15 திருநங்கைகள் இருக்கோம். இந்த ஓட்டலை பொறுத்தவரை இந்த வேலை உனக்கு, இந்த வேலை எனக்குனு எல்லாம் எந்தப் பிரிவும் இல்லை. எல்லாரும் எல்லா வேலையையும் சேர்ந்து தான் பண்ணுறோம்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இத்தனை வருஷ திருநங்கை வாழ்க்கையில, இந்த நிமிஷம் மாதிரி நான் சந்தோஷத்த உணர்ந்தது இல்ல. ஏதேதோ காரணத்துக்காக அழுதுருக்கேன். ஆனா சந்தோஷத்துல நான் அழுகுறது இப்போதான். காசு கேட்டு ஒவ்வொரு கடை வாசல்லயும் போயி நின்னுருக்கேன். ஆனா நானே இன்னைக்கு ஒரு கடையில, அதுவும் கல்லாவுல நின்னு காசு வாங்குறேன்'' - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசத் தொடங்குறார் திருநங்கை சாருமதி. மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட, முழுக்க முழுக்கத் திருநங்கைகளால் நிர்வகிக்கப்படும் புதிய உணவகமான `மதுரை டிரான்ஸ் கிச்சன்' ஓட்டலில் பணிபுரிபவர்.

மதுரை டிரான்ஸ் கிச்சன்
மதுரை டிரான்ஸ் கிச்சன்
``நீதிபதி ஆகவேண்டும் என்பதே என் லட்சியம்!" - நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு

உணவகத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பை பார்த்துக்கொள்பவர், திருநங்கை ஜெயசித்ரா. ``நாங்க மதுரை, உலகனேரி பகுதியில வசிக்கிறோம். எங்க கூட 15 திருநங்கைகள் இருக்காங்க. கடந்த பத்து வருஷமா நாங்க கேட்டரிங் தொழில்தான் செஞ்சுட்டு இருக்கோம். ஆனா அதை ஓட்டலா மாத்தணும்னு தோணுனது இல்ல.

இந்தக் கொரோனா காலகட்டம் எல்லாருக்கும் ஒரு வித சிரமத்தை கொடுத்துச்சு. அப்படித்தான் எங்களுக்கும் கேட்டரிங் தொழில்ல பெரிய அடி விழுந்துச்சு. அப்போதான் பெங்களூரைச் சேர்ந்த `ஸ்வஸ்தி'ங்கிற ஒரு நிறுவனம், `இத்தன வருஷ கேட்டரிங் அனுபவம் இருக்கே, அதை நீங்க ஓட்டலா மாத்தலாமே...'னு யோசனை சொன்னாங்க. எங்களுக்கு ரொம்ப உற்சாகமா இருந்தது.

எங்க கையில காசு இருக்கு. ஆனாலும், எங்கள நம்பி இடம் கொடுக்கணுமே? ரெண்டு மாசமா ஓட்டலுக்கான இடம் தேடினோம். ஒவ்வொரு இடமும், போறப்போ நல்லா பேசுவாங்க. அட்வான்ஸ் கொடுக்கப்போற நேரத்துல, `இல்ல.. திருநங்கைகளுக்கெல்லாம் இடம் கொடுக்க முடியாது'னு மூஞ்சிக்கு நேராவே சொல்லுவாங்க. ரொம்பவே உடைஞ்சு போனோம்.

மதுரை கிச்சன்
மதுரை கிச்சன்

கடைசியா, ஒரு சிவபக்தர்தான் தன்னோட இடத்துல கடை வெச்சுக்கச் சொல்லி எங்ககிட்ட கொடுத்தார். `திருநங்கைகள் மேல வரணும்'னு சொல்லி ஊக்கப்படுத்தினார்'' என்று ஜெயசித்ரா சொல்ல, தொடர்ந்து பேசினார் வந்தனா.

``எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி. இங்க மதுரைக்கு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இந்த ஓட்டல்ல சப்ளை, காய்கறிகள் வெட்டுறது, பார்சல் கட்டுறதுனு எல்லா வேலையும் பார்க்குறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்க 15 திருநங்கைகள் இருக்கோம். இந்த ஓட்டலை பொறுத்தவரை இந்த வேலை உனக்கு, இந்த வேலை எனக்குனு எல்லாம் எந்தப் பிரிவும் இல்லை. எல்லாரும் எல்லா வேலையையும் சேர்ந்துதான் பண்ணுறோம். திருநங்கைகள இந்தச் சமூகம் புறக்கணிச்சுட்டே இருக்குங்கிற வேதனை எங்களுக்குள்ள இருக்கு. இதுல நாங்க ஜெயிச்சுக் காட்டினா, எங்களை மாதிரி பிற திருநங்கைகளுக்கும் அது நம்பிக்கை தரும்னு நம்புறோம். திருநங்கைகள் தங்களோட திறமையை வளர்த்துக்கிட்டு சுயதொழில் முனைவோரா மாறணும்'' என்றார்.

மதுரை கிச்சன்
மதுரை கிச்சன்
``மத்தவங்க புறக்கணிச்சப்போ கல்விதான் நம்பிக்கை கொடுத்துச்சு!" - திருநங்கை நாட்டுப்புறக் கலைஞர் வர்ஷா

ஓட்டலில் கேஷியர் பொறுப்பை நிர்வகித்துக்கொண்டிருந்த சாருமதி, திருநெல்வேலியைச் சேர்ந்தவர். ``நான் மதுரைக்கு வந்து பத்து வருஷமாச்சு. ஆரம்பக் காலத்துல காசு கேட்டுதான் போவேன். அப்படிப் போற இடத்துல சிலர் கையப் பார்த்து காசு கொடுப்பாங்க, சிலர் உடம்ப பார்த்து காசு கொடுப்பாங்க. போலியாவாவது சிரிச்சாதான் காசு கிடைக்கும். ஒரு ரூபாய் காசு வாங்குறதுக்கு ஏகப்பட்ட அவமானங்கள சந்திச்சிருக்கோம். ஏன்னா அவங்க காசு போடுற இடத்துல இருக்காங்க, நாங்க வாங்குற இடத்துல இருந்தோம்.

கடை கடையா போயி வாசல்ல நின்னுருக்கேன் காசு கேட்டு. ஆனா இன்னைக்கு கடைக்குள்ள நின்னு கணக்கு வழக்குப் பார்க்குறோம்னு நினைக்கும்போது, கனவா நனவானு இருக்கு. மதுரை மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பாங்கன்னு நம்புறோம். இங்க நம்பிக்கை தானே எல்லாம்!'' என்றார்.

முயற்சி திருவினை ஆகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு