Published:Updated:

`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்களிடம் ஆசை வார்த்தை கூறி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது தொடர்கதையாகிவருகிறது.

மலைகள் சூழ்ந்த தேனி மாவட்டத்தில், மலைகளிலிருந்து கீழிறக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றிச் சிரமப்படுவது ஒருபுறம் என்றால், அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

தென்கரை போலீஸ் ஸ்டேஷன்
தென்கரை போலீஸ் ஸ்டேஷன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள செல்லாக்காலனி, நேரு நகர், சுக்காம்பாறை, சொக்கன் அலை, குறவன் குழி, கரும்பாறை ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களை அணுகிய பெண் ஒருவர், பழங்குடியின மக்களின் பெயரில், வங்கியில் லோன் எடுத்து மோசடியில் ஈடுபட்டது குறித்து அம்மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய செல்லாக்காலனியைச் சேர்ந்த கருப்பையா, ``சோத்துப்பாறையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி வசந்தி, பழங்குடியினப் பெண்களைச் சந்தித்து, வங்கியில் லோன் வாங்கிக்கொடுக்கிறேன் என்றும், இதைக் கணவன்மார்களிடம் சொல்லாதீர்கள் எனவும் கூறியிருக்கிறார். பணம் செலுத்த முடியாது எனப் பெண்கள் கூறியிருக்கிறார்கள். `பணம் நான் கட்டிக்கொள்கிறேன். உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் பணத்தை எடுத்துக்கொடுங்கள். போதும். அப்படி செய்தால், ஆயிரம் ரூபாய் தருகிறேன்.’ எனக் கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பி, சுற்றியுள்ள மலை கிராமங்களில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்
`போலியாக சாதிச் சான்றிதழ் வாங்கிவிட்டார்!' -ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கொதிக்கும் தேனி கிராமம்

பெரியகுளம் ஆக்ஸிஸ் வங்கிக்கு, வாரம் 5 நபர்களாக அழைத்துச் சென்று, வங்கிக்கணக்கிற்குத் தேவையான ஆவணங்களைக் கொடுத்து, உடனே லோன் ஏற்பாடுகளையும் செய்து, தலா ரூ. 26,000 பெற்றுக்கொண்டு, அப்பெண்களிடம் ரூ.1000 மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பியிருக்கிறார். நாள்கள் கடந்த நிலையில், கடந்த 5 மாதமாக வட்டி கட்டவில்லை என வங்கியிலிருந்து ஆட்கள் வீட்டிற்கு வந்தார்கள். அப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்தது தெரிந்தது. வங்கி, தனியார் நிறுவனத்திடம் பணம் வசூல் செய்யும் பொறுப்பைக் கொடுத்துவிட்டனர். அவர்கள், வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால், மலைகிராம மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துள்ளனர். மோசடி செய்த வசந்தியை தேடிச் சென்றோம். அவர், தலைமறைவாகிவிட்டார். தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் கலெக்டரைச் சந்திக்க வந்தோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு