Published:Updated:

தேனி: படுக்கக்கூட இடமின்றித் தவிக்கும் பழங்குடிகள்; அஸ்திவாரத்துடன் முடங்கிய பணி தொடங்குவது எப்போது?

பேஸ்மட்டத்துடன் நின்ற பணி

பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பேஸ்மட்டம் மட்டும் போடப்பட்ட நிலையில் கட்டடப் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிவிட்டது. 

தேனி: படுக்கக்கூட இடமின்றித் தவிக்கும் பழங்குடிகள்; அஸ்திவாரத்துடன் முடங்கிய பணி தொடங்குவது எப்போது?

பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பேஸ்மட்டம் மட்டும் போடப்பட்ட நிலையில் கட்டடப் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிவிட்டது. 

Published:Updated:
பேஸ்மட்டத்துடன் நின்ற பணி

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாகுடி பழங்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்குத் தற்போதுவரை சாலை வசதி அமைத்துக்கொடுக்கப்படாமல் உள்ளது. மலையில் வளைந்து நெளிந்து செல்லும் மண்பாதையோ கரடுமுரடாக உள்ளது. இந்த மலைப்பாதையில் மக்கள் ஆபத்தான முறையில் உயிரைப் பணயம் வைத்து நடந்தும், ஜீப்பிலும் பயணம் செய்து வருகின்றனர்.

இடிந்த வீடுகள்
இடிந்த வீடுகள்

இங்கு சுமார் 40 பழங்குடியினக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குத் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன. இதனால், 2020-2021 நிதியாண்டில் போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் தொகுப்பு வீடுகளைப் பராமரிப்பு செய்ய ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் மொத்தம் 14 வீடுகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில், ஓரிரு வீடுகளில் மட்டுமே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் முதல்வரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பேஸ்மட்டம் மட்டும் போடப்பட்ட நிலையில் கட்டடப் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிவிட்டது.

நிறுத்தப்பட்டிருக்கும் கட்டடப்பணி
நிறுத்தப்பட்டிருக்கும் கட்டடப்பணி

புதிய வீடுகள் கட்டும் பணிக்காக மக்கள் வசித்த பழைய வீடுகள் அகற்றப்பட்டன. பல மாதங்களாக பணிகள் முடங்கிக் கிடப்பதால், இருந்த வீடுகளையும் இழந்துவிட்டு மலைப்பகுதிகளில் வாழ வழியின்றி நிர்க்கதியாக நிற்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் அப்பகுதிகளில் தற்காலிகமாகக் குடிசைகள் அமைத்து வசித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழங்குடியின மக்களிடம் பேசினோம். "புதிய வீடு கட்டித் தருகிறோம் என்று கூறி பழைய வீடுகளை இடித்தார்கள். ஆனால், புதிய வீடுகள் கட்டும் பணியைத் தொடங்கிவிட்டு அரைகுறையாகப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். முதலில் எங்களை மணல் கொண்டு வருமாறு வற்புறுத்தினார்கள். எங்களால் மணல் கொண்டு வர முடியாத நிலையில், இந்த ஊருக்குச் சாலை அமைத்த பிறகுதான் வீடு கட்ட முடியும் என்று கைவிரித்துவிட்டார்கள். இதுதொடர்பாக கடந்த டிசம்பரில் கலெக்டரிடம் மனு கொடுத்தால் 2 நாள்களுக்கு மட்டும் பணி செய்துவிட்டுக் கிளம்பினர். அதன்பிறகு பணிகள் நடக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து சென்றனர். பணிகள் விரைந்து முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்துச் சென்றனர். ஆனால் மீண்டும் அதே நிலையே தொடர்கிறது" என்றனர்.

கலெக்டரிடம் மனு
கலெக்டரிடம் மனு

பழங்குடியின செயல்பாட்டாளர்களிடம் பேசினோம். "முதுவாகுடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. கொட்டக்குடி ஊராட்சி நிர்வாகத்தினர் முதுவாகுடி மக்களிடம் வீடு கட்ட வேண்டுமானால் பணம் தர வேண்டும் என வசூலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்டடத்துக்குத் தேவையான கல், மணலைத் தருமாறு பழங்குடியினரிடம் கேட்டுள்ளனர். இதையும் சிலர் செய்துகொடுத்துள்ளனர். இருப்பினும் கட்டடம் பேஸ்மட்டத்தைத் தாண்டவில்லை.

முதுவாகுடி
முதுவாகுடி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரின் சொந்தத் தொகுதியில் இந்தப் பகுதி வருகிறது. அவரின் ஏற்பாட்டில்தான் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் நிதி ஒதுக்கீடு, ஒப்பந்தம் போன்ற காரணங்களால் பணி தள்ளிப்போனது. தற்போது தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பிறகாவது பணிகள் தொடங்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எங்கே அ.தி.மு.க ஆட்சியின் திட்டம் செயல்படுத்தினால் தி.மு.க-வுக்குப் பெயர் கிடைத்துவிடுமோ என நினைத்து அதிகாரிகளும் இவ்விவகாரத்தில் மெத்தனம் காட்டுகின்றனர்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism