Published:Updated:

திருச்சி: `பத்மநாபனை நீக்கியதே தளபதி விஜய்தான்..!’ - மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்

எஸ்.ஏ.சி-யுடன் பத்மநாபன் 
 என்ற ராஜா
எஸ்.ஏ.சி-யுடன் பத்மநாபன் என்ற ராஜா

எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த்தான்... வேண்டுமென்றே தன் மீது பொய்ப் புகார்கள் பரப்புகிறார்கள்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாநிலத் தலைவராக எஸ்.ஏ.சி-யால் நியமிக்கப்பட்டவர் திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்ற ஆர்.கே.ராஜா. இந்தநிலையில், `தான் உயிருக்குப் பயந்து தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும், தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த்தான்’ என்று விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவரான ஆர்.கே.ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்
விஜய்

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., `விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, சமீபத்தில் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்தார். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜாவை மாநிலத் தலைவராகக்கொண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கையைப் பிடிக்காத நடிகர் விஜய் 'தனக்கும் இந்த கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை" என்று அறிவித்தார். அந்தக் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இந்தநிலையில், எஸ்.ஏ.சி. தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் (அ.இ.த.வி.ம.இ.) கட்சிக்கு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பத்மநாபன் என்ற ராஜா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் புகார் அளித்திருக்கிறார். அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நிலம் வாங்கித் தருவதில் மோசடியில் ஈடுபட்டதாக ராஜா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர் சட்ட விரோதமாக 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் வாய்மொழிப் புகார் அளிக்கப்பட்டது.

எஸ்.ஏ.சி-யுடன் பத்மநாபன் 
 என்ற ராஜா
எஸ்.ஏ.சி-யுடன் பத்மநாபன் என்ற ராஜா

அதன் அடிப்படையில், சென்னை உயர் காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் ராஜாவைக் கைது செய்வதற்கு நேற்று முழுவதும் திருச்சி போலீஸார் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாகியிருக்கிறார் ராஜா.

விஜய்
விஜய்

இந்தநிலையில் அவரது உறவினர் ஒருவரை நேற்று இரவு காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அவரிடம் பெரிதாகத் தகவல் கிடைக்காத நிலையில், இன்று காலை அவரின் மனைவி மற்றும் மாமனாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர்.

இந்தநிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ``அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாநிலத் தலைவராக எஸ்.ஏ.சி-யால் நியமிக்கப்பட்டவன் நான். அன்றிலிருந்தே என்னை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்துவருகிறேன். இந்தநிலையில் என் குடும்பத்தையும் போலீஸார் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்
நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த்

எனக்கோ என் குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த்தான்... வேண்டுமென்றே என் மீது பொய்ப் புகார்கள் பரப்பப்படுகின்றன. இத்தனை வருடமாக இந்த இயக்கத்தில் இருந்துவருகிறேன். என் மீது எந்தப் புகாரும் இல்லை. இவர்கள் வேண்டுமென்றே என்மீது பழிப்போடப் பார்க்கிறார்கள். நான் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யால் வளர்ந்தவன். நான் விஜய்யிடம் நெருங்கிவிடக் கூடாது என்பது புஸ்ஸி ஆனந்த் செய்யும் வேலைதான்" என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் கரிகாலனிடம் பேசினோம். ``ராஜா பல்வேறு தவறுகள், குற்றங்கள் தொடர்ந்து செய்து வந்தது, விஜய்யின் நேரடி கவனத்துக்குச் சென்றதால், ராஜாவை இயக்கத்திலிருந்து நீக்கினார் விஜய்.

திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் கரிகாலன்
திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் கரிகாலன்

இவருக்கும் மக்கள் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தும் தளபதியின் அனுமதி இல்லாமல் தளபதியின் பெயரையும், இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்திக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அத்தோடு இன்றுவரையிலும் `நான்தான் மாவட்டச் செயலாளர்’ என்று சொல்லிக்கொண்டு ஒரு சில வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்.

புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் தளபதியின் பெயரையோ புகைப்படத்தையோ, இயக்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். இவரைக் கட்சியிலிருந்து நீக்கியது புஸ்ஸி ஆனந்த்தான் என்று நினைத்துக்கொண்டு அவர் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். ஆனால், இவரை நீக்கியது தளபதி விஜய்தான்” என்றார் ஆணித்தரமாக.

அடுத்த கட்டுரைக்கு