Published:Updated:

`குழந்தைக்கு இடப்பக்கத்துக்கு பதிலாக வலப்பக்கம் ஆபரேஷன்!' மருத்துவரின் ஃபேஸ்புக் பதிவும் சர்ச்சையும்

`20 நாள் குழந்தை ஒன்றுக்கு வயிற்றுக்குள், இடது பகுதியில் கட்டி ஒன்று இருந்தது. அதை அறுவை சிகிச்சை செய்யத் தயாரான போது, என் சீனியர் , ``உன்னால் வலது பக்கம் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்ய முடியுமா" என்று கேட்டார். ஏன் என்று கேட்ட போது...

இருபது நாள் பெண் குழந்தை ஒன்றுக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்னைக்காக இடது பக்க வயிற்றில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை, வலது பக்க வயிற்றின் வழியாகச் செய்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற அறுவை சிகிச்சை நிபுணர். அந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash
பிறந்த 3-ம் நாள் தாயிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தை; போராடி மீட்ட அனுபமா!

இது குறித்து மருத்துவர் வெளியிட்ட பதிவில், `20 நாள் குழந்தை ஒன்றுக்கு வயிற்றுக்குள், இடது பகுதியில் கட்டி ஒன்று இருந்தது. அதை அறுவை சிகிச்சை செய்யத் தயாரான போது, என் சீனியர் , ``உன்னால் வலது பக்கம் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்ய முடியுமா" என்று கேட்டார். ஏன் என்று கேட்ட போது, ``இது பெண் குழந்தை. குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாக மாறும் போது, தழும்பு வயிற்றின் இடது பக்கம் இருந்தால் புடவை கட்ட சிரமப்படுவாள். வலது பக்கம் தழும்பு இருந்தால் தழும்பு பெரிதாகத் தெரியாது, அதனால் வலது பக்கம் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்று கூறினார். நானும் சில சிரமங்களுக்குப் பின் அந்த அறுவை சிகிச்சையை வலது பக்கம் செய்து முடித்தேன்". என்று பதிவிட்டு இருந்தார்.

`அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளானதும் புடவைதான் கட்டுவாள் என்று ஏன் முடிவு செய்கிறீர்கள்?' என்று பெண்ணியவாதிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்று, இடது பக்கம் உள்ள ஒரு பிரச்னைக்கு வலது பக்கம் வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது பாதுகாப்பானதா... இதில் உள்ள மருத்துவ சிக்கல்கள் என்ன என்பது குறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த, பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபியிடம் பேசினோம்.

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

`` இது ஒரு புது முயற்சி. இதனைச் சிறப்பாகச் செய்து முடித்த மருத்துவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் இது போன்ற அறுவை சிகிச்சை செய்வது அதிக ரிஸ்க்கானது. இடது பக்கம் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கமாகச் செய்யும்போது கூடுதல் நேரம் தேவைப்படலாம். அதனால் குழந்தைக்கு, கூடுதலாக மயக்க மருந்து கொடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இது குழந்தையின் உடல் நலனை பாதிக்கும். இது எல்லாருடைய உடல் நலனுக்கும் பொருந்தாது. அறுவை சிகிச்சையைத் தொடங்கிய பிறகுகூட சிக்கல்கள் வரலாம். எனவே திட்டமிடல் தெளிவாக இருக்க வேண்டும்.

Doctor Vikatan: குழந்தை பெற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகும் வடியாத வயிறு; குறைக்க வழிகள் உண்டா?

மேலும் இதனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இடது பக்கத்திற்கு பதிலாக, வலது பக்கம் வழியாக அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்று கேட்டு வரலாம். இதனை ஒரு முயற்சி அல்லது சாதனை என்றெண்ணி, கடந்து விடுவது நல்லது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு