Published:Updated:

`தனுஜா அம்மன்' - உயிரிழந்த மகளுக்கு சிலைவைத்து திருவிழா; நெகிழும் திருச்சி குடும்பம்

தனுஜா அம்மனுக்கு பாலாபிஷேகம்

மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு டூவீலரில் மருத்துவமனைக்குக் கிளம்பியுள்ளார் பழனிச்சாமி. எதிரே வந்த பால் வேன் ஒன்று பழனிச்சாமியின் டுவீலர் மீது மோதியிருக்கிறது. இதில் தூக்கி வீசப்பட்ட தனுஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போயுள்ளார்.

`தனுஜா அம்மன்' - உயிரிழந்த மகளுக்கு சிலைவைத்து திருவிழா; நெகிழும் திருச்சி குடும்பம்

மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு டூவீலரில் மருத்துவமனைக்குக் கிளம்பியுள்ளார் பழனிச்சாமி. எதிரே வந்த பால் வேன் ஒன்று பழனிச்சாமியின் டுவீலர் மீது மோதியிருக்கிறது. இதில் தூக்கி வீசப்பட்ட தனுஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போயுள்ளார்.

Published:Updated:
தனுஜா அம்மனுக்கு பாலாபிஷேகம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பன்னாங் கொம்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு காவியா, தனுஜா என இரு மகள்கள், சண்முகநாதன் என்ற மகன் என மொத்தம் மூன்று குழந்தைகள். கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி, திடீரென தனுஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு டூவீலரில் மருத்துவமனைக்குக் கிளம்பியுள்ளார் பழனிச்சாமி.

தனுஜா அம்மன்
தனுஜா அம்மன்

வீட்டிலிருந்து கிளம்பிய அரை கிலோ மீட்டர தூரத்திலேயே, எதிரே வந்த பால் வேன் ஒன்று பழனிச்சாமியின் டுவீலர் மீது மோதியிருக்கிறது. இதில் தூக்கி வீசப்பட்ட தனுஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போயுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தபோது பலரும், ‘குழந்தை சாமியாக இருந்து உங்கள் குடும்பத்தைக் காப்பாள்’ என ஆறுதல் சொல்லியிருக்கின்றனர். தனுஜா இறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பழனிச்சாமியின் தம்பி பாலு, குழந்தை தனுஜாவின் உடைகளை எடுத்துக்கொண்டு சாமி வந்து ஆடினார் என்று சொல்லப்படுகிறது. பூசாரிகளிடம் அருள்வாக்கு கேட்க, ‘உங்க குழந்தை தெய்வமா வரப்போகுது. குழந்தை இறந்த இடத்துல இருந்து பிடி மண்ணை எடுத்து வெச்சு சாமி கும்பிடுங்க’ எனச் சொல்லியிருக்கின்றனர். அதையடுத்து பிடி மண்ணை எடுத்து வைத்து பூஜை செய்துவந்த தனுஜா குடும்பத்தினர், ஒருகட்டத்தில் தங்கள் வீட்டின் முன்பே குழந்தையை அம்மன் ரூபத்தில் ஓர் அடி உயர சிலையாக வடித்து கோயில் கட்டி வழிபட ஆரம்பித்துள்ளனர். அந்தக் கோயிலுக்கு ‘தனுஜா அம்மன்’ எனவும் பெயரிட்டுள்ளனர். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையின் முதல் திங்கட்கிழமையன்று தனுஜா அம்மனுக்குத் திருவிழா நடத்தி வழிபட்டு வருகின்றனர்.

தனுஜா அம்மனுக்கு பூக்குழி இறங்கும் உறவினர்கள்
தனுஜா அம்மனுக்கு பூக்குழி இறங்கும் உறவினர்கள்

இதுகுறித்து தனுஜாவின் தந்தை பழனிச்சாமியிடம் பேசினோம். “இறந்து போன எங்க மக, தெய்வமா எங்களோடதான் இருக்கா. அதனாலதான் வீட்டுக்கு முன்னாடி அவளுக்கு கோயில் கட்டி ‘தனுஜா அம்மன் கோயில்’ன்னு கும்பிட்டுக்கிட்டு இருக்கோம். மே 16-ம் தேதி தனுஜா அம்மனுக்கு பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி, அபிஷேகம் செஞ்சு நேர்த்திக்கடன் செலுத்துனோம். இதுல எங்க சொந்தக்காரங்க, ஊர்மக்கள்னு பலரும் கலந்துக்கிட்டாங்க. பொங்கல் வெச்சு, எல்லாருக்கும் அன்னதானம் போட்டோம். இறந்துபோன எங்க மக எங்களுக்கு மட்டுமில்லாம, எங்க சொந்தக்காரங்க, ஊர்மக்கள் எல்லாருக்கும் நிச்சயம் காவல் தெய்வமா இருப்பா” எனக் கலங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism