Published:Updated:

திருச்சி: வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்! - கழுகுப் பார்வை புகைப்படங்கள்

திருச்சியில் புங்கனூர் அருகே சாந்தபுரம் பகுதியில், அரியாற்றுக் கரை நேற்று மதியம் உடைந்தது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருச்சியில் புங்கனூர் அருகே சாந்தபுரம் பகுதியில் அரியாற்றுக் கரை நேற்று மதியம் உடைந்தது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையால், அங்கிருக்கும் குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரை உடைந்ததால் சாந்தபுரம் பகுதியிலிருக்கும் 400 ஏக்கர் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்பதால், அரியாற்றின் மறுகரையும் சாந்தாபுரம் பகுதியில் உடையும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்திலிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism