Published:Updated:

`இரவு 9 - 12 மணி வரைதான் கடை; ஆனால், 18 வகையான தோசை கிடைக்கும்!' - இது மலைக்கோட்டை ஸ்பெஷல்

தோசை

பெரும்பாலும், டிபன் கடைகளில் மாலை நேரத்தில் வியாபாரம் ஆரம்பித்துவிடும். ஆனால், இந்தக் கடையிலோ வியாபாரம் இரவு 9 மணிக்குத்தான் தொடங்குகிறது. இரவு 12 மணி வரை இயங்கும் கடையில் அந்த நடுநிசியிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஓர் இரவு நேரத்தில் கடைக்கு விசிட் அடித்தோம்.

`இரவு 9 - 12 மணி வரைதான் கடை; ஆனால், 18 வகையான தோசை கிடைக்கும்!' - இது மலைக்கோட்டை ஸ்பெஷல்

பெரும்பாலும், டிபன் கடைகளில் மாலை நேரத்தில் வியாபாரம் ஆரம்பித்துவிடும். ஆனால், இந்தக் கடையிலோ வியாபாரம் இரவு 9 மணிக்குத்தான் தொடங்குகிறது. இரவு 12 மணி வரை இயங்கும் கடையில் அந்த நடுநிசியிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஓர் இரவு நேரத்தில் கடைக்கு விசிட் அடித்தோம்.

Published:Updated:
தோசை

தோசை பொதுவாகவே பலருக்கும் பிடித்த உணவு என்றாலும், ஒரே மாதிரி தோசையை சாப்பிடுவதைவிட, அதில் வெரைட்டி வெரைட்டியாகச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?! அதற்கு ஆசைப்படுபவர்களுக்கான கடைதான், திருச்சியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் டிபன் கடை.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக, 18 வகையான தோசைகள், சீஸனுக்கு ஏற்றாற்போல வகை வகையான அடைகள், முக்கியமாக இரவு நேரத்திலும் வெரைட்டி சாதங்கள் எனக் களைகட்டுகிறது ஆர்.எஸ்.ஆர் உணவகம். திருச்சிக்கு அடையாளமாக இருக்கும் மலைக்கோட்டைக்கு எதிரில் இருக்கும் சிறிய தள்ளுவண்டி தோசைக்கடை இது.

ரெங்கசாமி
ரெங்கசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும்பாலும், டிபன் கடைகளில் மாலை நேரத்தில் வியாபாரம் ஆரம்பித்துவிடும். ஆனால், இந்தக் கடையிலோ வியாபாரம் இரவு 9 மணிக்குதான் தொடங்குகிறது. இரவு 12 மணி வரை இயங்கும் கடையில் அந்த நடுநிசியிலும் கூட்டம் அலைமோதுகிறது.
ஓர் இரவு நேரத்தில் கடைக்கு விசிட் அடித்தோம். கூட்டம் அதிகமாகவே இருக்க, சிறிது நேரம் காத்திருந்து, பின்னர் உரிமையாளர் ரெங்கசாமியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

``2006-ல ஆரம்பிச்சு 16 வருஷமா இந்தக் கடையை நடத்திக்கிட்டு வர்றேன். ஆரம்பத்துல சின்ன இட்லிக் கடையாதான் போட்டோம்...'' - வேலைகளுக்கு இடையே பேச ஆரம்பித்தார் ரெங்கசாமி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அப்போதுல இருந்தே, எங்க குடும்பத்துல இருக்குறவங்கதான் கடையில உதவியா இருக்காங்க. அதனாலதான் எந்த சோர்வும் இல்லாம நடத்த முடியுது. சாயந்தரம் வரைக்கும் இந்த இடம் அவ்ளோ கூட்டமா இருக்கும். அதான் நாங்க லேட்டா கடை திறக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல, இந்த நேரத்துல யார் வருவானு தயக்கம் இருந்துச்சுதான். அப்புறம் மக்கள் தந்த வரவேற்புதான், கடையை நைட் 9 மணிக்குத் திறக்குற தைரியத்தை கொடுத்துச்சு. தோசையில வெரைட்டி கொடுக்குறதைத்தான் எங்க கடையோட சிறப்பா ஆக்கிக்கிட்டோம். அதேபோல, எங்கயும் இல்லாத வகையில இங்க நைட்டு வெரைட்டி ரைஸ் கொடுக்குறோம்'' - ரெங்கசாமியின் தோசைக்கடை பேக்கிரவுண்டை பொறுமையாகக் கேட்ட நாம், பின்னர் பொறுக்க முடியாமல் தோசைகளை சுவைக்க ஆயத்தமானோம்.

தோசை
தோசை

கடையின் ரெகுலர் வாடிக்கையாளர்கள், `தக்காளி பட்டர் தோசை சாப்பிடுங்க, நல்லாருக்கும்' என்று பரிந்துரைக்க, ஒரு தக்காளி பட்டர் தோசையுடன், காலிஃப்ளவர் தோசை, பொடி தோசை, காளான் தோசை என ஆர்டர் செய்தோம். `கொஞ்சம் நேரம் ஆகும், அதுவரைக்கும் வெரைட்டி ரைஸ் எல்லாம் சாப்பிடுங்க' என்று கூறிய ரெங்கசாமியிடம் நாம் மாங்கா சாதம், பொங்கல், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தட்டில் வைக்கச் சொல்ல, `கூடவே குடைமிளகாய் சாதமும் இருக்கு' என்று சொல்லி அதிலும் கொஞ்சம் வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அதென்ன குடைமிளகாய் சாதம்' என அதை முதலில் சுவைத்தோம். வித்தியாசமான சுவையில், சூப்பர். `அடப் போங்கப்பா... ராத்திரி நேரத்துல சாதமா' என்பவர்கள்கூட விரும்பிச் சாப்பிடும் அளவுக்கு ருசியாக உள்ளன அனைத்து சாத வகைகளும்.

இப்போது சுடச்சுட காலிஃப்ளவர் தோசை ரெடி. சட்னி, சாம்பாரை தேடாமல் வெறும் தோசையை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். தொடர்ந்து ஒவ்வொரு தோசையாக வர, அனைத்தும் ஒவ்வொரு வித சுவை. சொல்லப்போனால் இரண்டாவது தோசைக்கு வயிறு நிரம்பிவிட்டாலும், சுவையால் கட்டிப்போடப்பட்ட வாய், விடாமல் மொத்தத்தையும் சாப்பிட்ட பின்னரே திருப்தி அடைந்தது.

தோசை
தோசை

இன்னும், பட்டர் தோசை, நெய் தோசை, பொடி தோசை, வெஜிடபிள்ஸ் தோசை, வெங்காய தோசை, பருப்புப் பொடி தோசை, பூண்டுப் பொடி தோசை, மிளகு தோசை என வெரைட்டி தோசைகள் மட்டுமல்ல, கடையில் மூலிகை தோசைகளும் கிடைக்கின்றன. குறைந்த விலையில், சைவ ருசியில், விதவிதமாக தோசைகளை ருசிக்க... மலைக்கோட்டைக்கு வருபவர்கள் மிஸ் பண்ணாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.

நீங்க அடுத்த முறை மலைக்கோட்டைக்கு வரும்போது... தோசைகள் வரவேற்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism