Published:Updated:

`டிவி, போனில் மட்டுமல்ல; இனி சிக்னலிலும் ராஜா பாட்டுதான்!' - திருச்சி காவல்துறையின் புது முயற்சி

இசையைக் கேட்கும் வாகன ஓட்டிகள், காத்திருக்கும் டென்ஷன் இன்றி கூல் ஆகி சிக்னல்களில் நின்று செல்கின்றனர். திருச்சி மாநகர காவல்துறையின் இந்த ஏற்பாடு வாகன ஓட்டிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் மக்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெளியூர், உள்ளூர், அலுவலகம், தொழில் எனப் பல காரணங்களுக்காக அனைவரும் தங்களது வாகனங்களில் விரைந்துகொண்டிருக்கும்போது, டிராஃபிக்கில் காத்திருக்க நேரிடும் நொடிகளும் நிமிஷங்களும் பயணப் பிரியர்களுக்கும்கூட அலுப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். இந்நிலையில், திருச்சி மாநகரில் சிக்னலில் காத்திருப்பவர்களை கூல் செய்ய, சிக்னலில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் இசையும் ஒலிக்கவிடப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் காத்திருக்கும் நேரம் என்பது அலுப்பு மறைந்து ரசிப்பு உடையதாக மாறுகிறது என்கிறார்கள் திருச்சி மக்கள்.

திருச்சி சிக்னல்
திருச்சி சிக்னல்
ஒரு பாடல் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? - இப்படிக்கு அனுதின பயணி

ஊரடங்குத் தளர்வு காரணமாக இப்போது உலகம் மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பித்திருப்பதால், சாலைகளும் பழையபடி பிஸி ஆகிவிட்டன. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பெரிய, சிறிய கடைகள், காய்கறி சந்தைகள் எனத் தங்கள் தினசரி பணிக்காக வாகனப் பயணம் மேற்கொள்பவர்கள் முன்போல சாலைகளில் பறக்க ஆரம்பித்திருப்பதால், மாநகரில் சிக்னல்கள் பரபரப்பாகவும், வாகன நெரிசலுடனும் காணப்படுகின்றன.

சிக்னலில் காத்திருக்கும் சில நொடிகள், சில நிமிடங்களில் மக்கள் பொறுமையிழந்து வாகன ஹாரன்களை அடித்தபடி இருக்க, இந்தக் கலவரக் காட்சிகளை மாற்ற வேண்டும் என நினைத்த திருச்சி மாநகர காவல்துறையினர் புது முயற்சியாக சிக்னல்களில் உள்ள ஸ்பீக்கரில் இசைஞானியின் இசையை ப்ளே செய்கின்றனர்.

திருச்சி சிக்னல்
திருச்சி சிக்னல்

இசையைக் கேட்கும் வாகன ஓட்டிகள், தங்கள் பொறுமையற்ற நிலையைக் கைவிட்டு, பாட்டை ரசித்துக் கேட்டபடி சிக்னல்களில் நின்று செல்கின்றனர். திருச்சி மாநகர காவல்துறையின் இந்த ஏற்பாடு வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகரில் உள்ள ஒத்தக்கடை தலைமை தபால் நிலையம்,
டி.வி.எஸ் டோல்கேட் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சிக்னல்களில் உள்ள ஸ்பீக்கர்களில் விழிப்புணர்வு ஸ்லோகன்களுடன் இனிமையான இசையும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு