Published:Updated:

காவலர்களால் திரட்டப்பட்ட ரூ.1,18,000 - நெகிழ்ந்த ராணுவ வீரர் பழனி குடும்பம்

இந்திய ராணுவ வீரர் பழனி
இந்திய ராணுவ வீரர் பழனி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு முதன்முதலாக ரூ.1,18,000 நிதியளித்து உதவியுள்ளது காவலர் குழு.

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு காவலர்கள் ஒன்றிணைந்து 1.18 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

இந்திய ராணுவ வீரர் பழனி
இந்திய ராணுவ வீரர் பழனி

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக் பகுதியில் உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இந்தப் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கல்வானில் சாலை மற்றும் பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகளை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வந்தனர். இதற்கு சீன ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினர் இடையே அவ்வப்போது சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். பழனியின் உடல் அவரது சொந்த ஊரான திருவாடானை அருகே உள்ள கடுக்கலூரில் இரு வாரங்களுக்கு முன் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ராமநாதபுரத்தில் வசித்து வரும் நிலையில், பழனியின் வயதான பெற்றோர் கடுக்கலூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியது. தி.மு.க சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தேசம் காக்கப் புறப்பட்டு தன்னுயிர் ஈந்த ராணுவ வீரர் பழனி! #RIPPalani #RIP #RealHero
பழனி குடும்பத்துக்கு நிதி வழங்கிய காவலர்கள்
பழனி குடும்பத்துக்கு நிதி வழங்கிய காவலர்கள்
உ.பாண்டி

இந்நிலையில் திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் முதன்முதலில் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ் அப் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் குழுவின் மூலம் பாதிப்புக்குள்ளாகும் காவலர் குடும்பங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். இதனடிப்படையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு முதன்முதலாக ரூ. 1,18,000 நிதியளித்து உதவியுள்ளனர்.

பழனி குடும்பத்துக்கு நிதி வழங்கிய காவலர்கள்
பழனி குடும்பத்துக்கு நிதி வழங்கிய காவலர்கள்

நேற்று கடுக்கலூரில் உள்ள பழனியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய தலைமைக் காவலர் ராஜேஷ் கண்ணன், முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் அருள்சாமி, காரைக்குடியில் காவலராக உள்ள ரவி ஆகியோர் பழனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி தங்கள் குழுவின் மூலம் திரட்டப்பட்ட நிதியை அளித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு