Published:Updated:

திருச்சி: ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 16 போலீஸ்காரர்கள்! - அதிரடிகாட்டிய எஸ்.பி

திருச்சி எஸ்.பி மூர்த்தி
திருச்சி எஸ்.பி மூர்த்தி

திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலைய சரகத்தில் சட்டவிரோதச் செயல்களான மணல் கடத்தல், ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

மணல் கடத்தல், லாட்டரி சீட், கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் உடந்தையாகச் செயல்பட்ட குற்றத்துக்காக 16 பேரை எஸ்.பி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி
திருச்சி

தமிழக காவல்துறையில் புதிய டி.ஜி.பி-யாக பொறுப்பேற்றிருக்கும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். காவல்துறையினர் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கொடுத்திருக்கிறார். மேலும், காவல்துறையில் பணியாற்றக்கூடியவர்கள் எந்தவிதக் குற்றத்துக்கும் துணைபோகக் கூடாது, அப்படிப் போனால் உயரதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கறாராக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலைய சரகத்தில் சட்டவிரோதச் செயல்களான மணல் கடத்தல், ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் திருச்சி எஸ்.பி மூர்த்தி ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், லால்குடி பகுதியில் மணல் கடத்தல், கஞ்சா, ஆன்லைன் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்பவர்களுடன் போலீஸார் உடந்தையாக இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லால்குடி காவல் நிலையத்திலுள்ள ஒரு எஸ்.எஸ்.ஐ மற்றும் 15 போலீஸார் என 16 பேரை திருச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார். ஸ்டேஷனில் இருக்கும் ஒட்டுமொத்த பேரையும் டிரன்ஸ்ஃபர் செய்திருக்கும் இந்த விவகாரம்தான் திருச்சி போலீஸாரை கலக்கமடையவைத்திருக்கிறது.

சங்கரன்கோவில்: காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிய ரௌடி! - கேரளாவில் கைதுசெய்த போலீஸார்

என்ன நடந்தது என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``சமீபகாலமாகவே திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா, லாட்டரி சீட் விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன.

திருச்சி எஸ்.பி மூர்த்தி
திருச்சி எஸ்.பி மூர்த்தி

இதைத் தடுக்க போலீஸார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், கஞ்சா பரவலைத் தடுக்க சிட்டி கமிஷனர் அருண் மறைமுகமாக ஒரு டீம் அமைத்து விசாரித்து, பலரை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்து கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறார். ஆனால், லால்குடி ஸ்டேஷனில் உள்ள போலீஸ்காரர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

அதுமட்டுமல்லாமல் எஃப்.ஐ.ஆர் பதிவேடுகளைச் சரியாகக் கையாளாமல் இருந்திருக்கிறார்கள். பணியில் இருப்பதாகச் சொல்லிவிட்டு விடுமுறை எடுத்திருக்கிறார்கள். இது போன்று பல இல்லீகல் வேலைகள் செய்ததால் கூண்டோடு மாற்றம் செய்திருக்கிறார். அந்த வரிசையில் இன்னும் சில அதிகாரிகள் சிக்கவிருக்கிறார்கள். அந்த விவரங்களை எஸ்.பி-யிடம் சமர்ப்பிக்கவிருக்கிறோம்” என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு