Published:Updated:

`அப்பா சொல்லிட்டாரு; ஆட்சிக்கட்டிலில் அமரவைப்போம்!' - போஸ்டரில் அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்

திருச்சி விஜய் ரசிகர்கள்
திருச்சி விஜய் ரசிகர்கள்

மதுரை, பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விஜய் ரசிகர்களின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தகுதியான தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. அந்த இடத்தை தளபதி நிரப்புவார்’ என்றும், `நாளைய முதல்வரே...’, `இளம் தலைவரே...’ என்றும் திருச்சி மாவட்டம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்
திருச்சி விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்

2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவ்வப்போது தங்களது போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றனர். `விஜய் மக்கள் இயக்கம், என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும்போது மாறும். மக்கள் கூப்பிடும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களைக் கூப்பிடுவதைவிட, மக்கள் 'வா' என்று கூப்பிடும்போது இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும்’ என்று இயக்குநரும், மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது திருச்சி மாவட்டம் முழுவதும் `நாளைய முதல்வரே! இளம் தலைவரே!’ என அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் இது போன்ற போஸ்டர்கள் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கின்றன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதேபோல், மதுரை, பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விஜய் ரசிகர்களின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போஸ்டர் விவகாரம் குறித்து திருச்சி விஜய் ரசிகர்கள் சிலரிடம் பேசினோம். ``ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தகுதியான தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இரும்புப் பெண்மணியாக இருந்து தமிழகத்தையும், கட்சியையும் வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா. ஆனால், இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் பி.ஜே.பி-யிடம் அடமானம்வைத்துவிட்டு அவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

போஸ்டர்
போஸ்டர்

தி.மு.க-வைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. தற்போது தகுதியே இல்லாதவர்களெல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமரும்போது எந்நேரமும் மக்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும் எங்கள் தளபதி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் என்ன தவறு... எங்கள் தலைவரின் அப்பா சொல்லிவிட்டார். இனி எங்கள் தலைவரை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்போம்’’ என்று உணர்வு பொங்கப் பேசினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு