Published:Updated:

பண்ருட்டி: `ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு; வரதட்சணை டிமாண்ட்...' - மணப்பெண் நடனமாடிய விவகாரத்தில் ட்விஸ்ட்!

திருமண விவகாரம்

பண்ருட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பெண் நடனமாடியதற்காக திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினரும் புகார்களை அடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

பண்ருட்டி: `ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு; வரதட்சணை டிமாண்ட்...' - மணப்பெண் நடனமாடிய விவகாரத்தில் ட்விஸ்ட்!

பண்ருட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணப்பெண் நடனமாடியதற்காக திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினரும் புகார்களை அடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

Published:Updated:
திருமண விவகாரம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவருக்கும், சுதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜனவரி 19-ம் இரவு காடாம்புலியூரிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருமணம்
திருமணம்

அந்த நிகழ்ச்சியில் மணப்பெண் சுதா உறவினர்களுடன் நடனமாடியதால் ஏற்பட்ட பிரச்னையில் திருமணம் நின்றதுடன், இரவோடு இரவாக மாப்பிள்ளையும் மாற்றப்பட்டு மறுநாள் 20-ம் தேதி சுதாவுக்கு முறைமாமனுடன் திருமணம் நடைப்பெற்றது. அதையடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகிய சுரேஷ், “திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் என்னையும் சுதாவையும் பெண் வீட்டார்கள் நடனமாட அழைத்தார்கள். எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். ஆனால் சுதா மீது ஒருவர் கைவைத்து ஆடிக் கொண்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே நான் மேடைக்கு வந்துவிட்டேன். சிறிது நேரத்திற்கு பிறகு மேடைக்கு வந்த சுதாவிடம் ‘நீ ஏன் மற்றவர்களோடு ஆடுகிறாய் ?’ என்று கேட்டேன். அதற்கு நான் இப்படித்தான் ஆடுவேன் என்று சுதா கூறினார். அதன்பிறகு அவர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடிக்கொண்டு, `தாலி கட்டுவதற்கு முன்பே என் பெண்ணை மிரட்டுகிறாயா' என்றதுடன் மேற்கண்ட அனைவரும் தகாத வார்த்தை கூறிக்கொண்டே என்னை அடித்தார்கள்.

திருமணம்
திருமணம்

தொடர்ந்து என்னையும் என் உறவினர்களையும் அடியாட்களை வைத்து மிரட்டி மணப்பெண்ணை அவர் விருப்பம் இல்லாமல் வேறொரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் நானும் என் உறவினர்களும் மன வேதனை அடைந்திருக்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமண ஏற்பாடுகள் வரை எங்களுக்கு 7 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகியிருக்கிறது. அதனால் எனக்கு நஷ்ட ஈடு பெற்று தந்து, என்னை ஏமாற்றியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரளித்திருக்கிறார்.

அதேபோல நேற்று மகளர் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மணப்பெண் சுதா, “எனக்கும் காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, அதற்காக 50 பவுன் நகையும், ஒரு காரும் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டிருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரும்தான் என்னுடன் நடனமாடினார். ஆனால் அவர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அதற்குக் காரணம் திருமணத்திற்கு முன்பே அவர் கேட்ட வரதட்சனையை நாங்கள் கொடுக்கவில்லை என்பதுதான். என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் என் உறவினரை திருமணம் செய்துகொண்டேன். என்னிடம் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்த சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரளித்திருக்கிறார். இந்த புகார்களையடுத்து உண்மையை கண்டறிய விசாரணையில் இறங்கியிருக்கிறது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம்.