Published:Updated:

``போலி டாக்டரா இருந்தாலும், அவங்களை கைது பண்ணாதீங்க!’’ - மக்களின் வித்தியாசமான போராட்டம்

Fake Doctors

இரவில் மற்றும் அவசரக் காலங்களில் 108-க்கு அழைத்தால், காட்டு வழிப்பாதையில் பலமுறை யானை வழிமறித்துள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்துதான் மருத்துவமனைக்குப் போக வேண்டும். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும்.

``போலி டாக்டரா இருந்தாலும், அவங்களை கைது பண்ணாதீங்க!’’ - மக்களின் வித்தியாசமான போராட்டம்

இரவில் மற்றும் அவசரக் காலங்களில் 108-க்கு அழைத்தால், காட்டு வழிப்பாதையில் பலமுறை யானை வழிமறித்துள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்துதான் மருத்துவமனைக்குப் போக வேண்டும். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும்.

Published:Updated:
Fake Doctors

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி தலைமையில் தேன்கனிக்கோட்டை சுகாதார முதன்மை அலுவலர் டாக்டர் ஞானமீனாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய வந்தனர்.

Natramplayam
Natramplayam

சுமார் 3 மணியளவில் நாட்ராம்பாளையம் என்னும் கிராமத்தில் ஆய்வு நடத்தியபோது, இரண்டு தனியார் கிளினிக்குகளைச் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணை முடிவில், மருத்துவம் பார்த்து வந்த இருவருமே முறைப்படி மருத்துவம் படித்தவர்கள் இல்லை. ஒகேனக்கல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (40) பி.எஸ்ஸி கணிதம் படித்துள்ளார். பென்னாகரம் மடம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (39), டிப்ளமோ பட்டதாரி. இருவரும் மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி மருத்துவர்கள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்யுமாறு அஞ்செட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார், தேன்கனிக்கோட்டை சுகாதார முதன்மை அலுவலர் ஞானமீனாட்சி.

போலி டாக்டர்கள்
போலி டாக்டர்கள்

இதையடுத்து, கிளினிக்குக்கு சீல்வைத்த அதிகாரிகள், மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். வழக்குபதிவுசெய்த அஞ்செட்டி காவல் துறையினர், இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் போலி மருத்துவர்களைக் கைது செய்யக் கூடாது என்று நாட்ராம்பாளையம் மக்கள் கூடி முற்றுகையிட்டுப் போராடியதுதான் விநோதம். மக்கள் சொன்ன காரணம், `அவர்களைவிட்டால் எங்களுக்கு மருத்துவ வசதியே இல்லை!’

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி சுரேஷ் கூறுகையில், "எங்கள் ஊர் முழுக்க முழுக்க மலைப்பகுதிதான். இங்குள்ள மலைப்பகுதிகளைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால், சொல்லும்படியாக அடிப்படை வசதிகள் எதுவுமே கிடைப்பதில்லை. முக்கியமாகச் சாலை வசதி, மருத்துவ வசதி என எதையும் அரசு எங்களுக்கு முறையாகச் செய்து தரவில்லை.

கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவ வசதி இல்லாத எங்கள் பகுதியில் விஷக்கடி, மர்மக்காய்ச்சல், மிருகங்களின் தாக்குதல் என அடிக்கடி நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைக்குப் போக வேண்டுமெனில், மலைப்பகுதியைக் கடந்து 20 கி.மீ தொலைவில் உள்ள அஞ்செட்டி அல்லது 35 கி.மீ தொலைவில் உள்ள பென்னாகரம் அரசு மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். அதுமட்டுமன்றி, இங்கு சாலை வசதியும் சரியில்லாததால் போய்ச் சேர்வதற்குள் பலரின் உயிர் பிரிந்துள்ளது.

இதுவரை மக்களுக்கு எந்தத் தீமையும் வந்ததில்லை. அவர்களையும் கைது செய்துவிட்டால், இனி தீமை எங்களுக்குத்தான்.
விவசாயி சுரேஷ்

மக்களின் நலத்தையும் உயிரையும் காக்க, சிவக்குமார் மற்றும் சக்திவேல் ஆகியோர் நாட்ராம்பாளையத்தில் கிளினிக்கைத் தொடங்கினார்கள். இன்றுவரை அவர்கள் செய்த வைத்தியத்தால் ஓர் உயிர்கூடப் போனதில்லை.

முற்றுகைப் போராட்டம்
முற்றுகைப் போராட்டம்

அதேபோல், எந்தவித பக்கவிளைவுகளும் தீமையும் மக்களுக்கு வந்ததில்லை. அவர்களையும் கைது செய்துவிட்டால், இனி தீமை எங்களுக்குத்தான். அதற்காகத்தான் போராடுகிறோம்" என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த மாதையன் கூறுகையில், "எங்கள் ஊரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள இயேசுராஜபுரத்தில், ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது. அங்கு செவிலியர்கள் மட்டும்தான். ஆனால் மருத்துவர்கள் இல்லை. அங்கு மாத்திரை மட்டுமே வழங்குவார்கள். இரவில் மற்றும் அவசரக் காலங்களில் 108-க்கு அழைத்தால், காட்டு வழிப்பாதையில் பலமுறை யானை வழிமறித்துள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்துதான் போக வேண்டும்.

போராட்டம்
போராட்டம்

சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும். போலி மருத்துவர்கள் என்று இவர்களைக் கைது செய்ய இவ்வளவு அவசரப்படும் அரசாங்கம், குறிப்பிட்ட சில வசதிகளுடன் மருத்துவமனைகளை கட்டிக்கொடுத்தால் நாங்கள் முற்றுகையிட அவசியமே இல்லை. ஏதாவது ஒரு நோய், காயம் என்றால் இவர்களிடம்தான் முதலுதவி பெறுவோம். அவர்களையும் கைது செய்துவிட்டால் காய்ச்சல், விஷக்கடி, விபத்து என்றால் நாங்கள் எங்கே போவது..." என்கிறார் மாதையன்.

மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில், "ஒகேனக்கலில் தற்போது ஆரம்பச் சுகாதார நிலையம் கட்டும் பணி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து, நாட்ராம்பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். இதுதொடர்பான கடிதத்தை அரசுக்கு அனுப்பி அனுமதி கோரியுள்ளோம். இதற்கான உத்தரவு மாவட்ட ஆட்சியரிடமிருந்து விரைவில் வரும்.

பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி

மேலும், இதற்காக ஓர் ஏக்கர் அளவில் நிலப்பரப்பைத் தேர்வு செய்துள்ளோம். நாட்ராம்பாளையம் மற்றும் இங்குள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதி மக்களுக்கு விரைவில் தரமான வசதிகளுடன்கூடிய மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும். அதுவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மக்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism