Published:Updated:

குமரி: காதலிப்பதாக ஏமாற்றி சிறார் வதைக்கு ஆளாக்கப்பட்ட 2 சிறுமிகள்... சக மாணவன், டெம்போ டிரைவர் கைது

சிறார் வதை

தனது கல்லூரியில் படிக்கும் சக மாணவியை நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்திருக்கிறார் மாணவர் ஒருவர்.

குமரி: காதலிப்பதாக ஏமாற்றி சிறார் வதைக்கு ஆளாக்கப்பட்ட 2 சிறுமிகள்... சக மாணவன், டெம்போ டிரைவர் கைது

தனது கல்லூரியில் படிக்கும் சக மாணவியை நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்திருக்கிறார் மாணவர் ஒருவர்.

Published:Updated:
சிறார் வதை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்துவருகிறார்.

அதே கல்லூரியில் கன்னியாகுமரி, சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவரும் படித்துவருகிறார். மாணவியும் மாணவரும் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரைப் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். இரண்டு நாள் கழித்து வீட்டுக்குத் திரும்பிய மாணவியிடம், `எங்கு சென்றாய்?’ எனப் பெற்றோர் கேட்டிருக்கின்றனர். அதற்கு, தன்னுடன் படித்த மாணவர் ஒருவர் தன்னைக் காதலித்ததாகவும், அவர் தன்னை நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்ததுடன், மாணவனைக் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிறார்வதை
சிறார்வதை

இது போன்று கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமியை டெம்போ டிரைவர் ஒருவர் சிறார் வதை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். மாணவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த மினி டெம்போ ஓட்டுநர் விவேக் (27) என்பவர் நட்பாகப் பழகியிருக்கிறார். பின்னர் மாணவியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். இதை நம்பிய சிறுமி, விவேக்குடன் கடந்த ஒன்றரை ஆண்டாகப் பழகியிருக்கிறார்.

இதற்கிடையே விவேக் அந்த மாணவியைத் தனியாகச் சந்தித்து சிறார் வதை செய்திருக்கிறார். தனிமையில் சந்திப்பது தொடர்ந்த நிலையில் இந்தத் தகவல் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கிறது. பெற்றோர் விசாரித்ததில் மாணவியை டெம்போ டிரைவர் விவேக் பலமுறை சிறார் வதை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸார் போக்சோ பிரிவில் விவேக் மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.