Published:Updated:

டி.ஜி.பி அலுவலக காவலர்களுக்கு கொரோனா வந்த டிராவல் ஹிஸ்ட்ரி! -அதிர்ச்சியில் அதிகாரிகள் #Corona

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்று சுகாதாரத்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

தமிழக காவல்துறையின் தலைமையிடமான டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய 2 காவலர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டி.ஜி.பி அலுவலகத்தை தவிர சென்னையில் இன்று ஓரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருவது, காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சோதனையில் போலீஸ்
சோதனையில் போலீஸ்
`தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா; சென்னையில் 174..’ - சுகாதாரத்துறை  #NowAtVikatan

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை போலீஸார் அமைத்தனர். பின்னர் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் போலீஸார் சாலைகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து போலீஸார் கண்காணித்துவருகின்றனர். கொரோனா களப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு கொரோனா தொற்று தொடர்ந்து உறுதியாகி வருகிறது.

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் அந்தக் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மாங்காடு, கோயம்பேடு, பரங்கிமலை, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் என அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட காவலர்கள் சந்தித்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டுவருகிறது. அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அவர்கள் பணியாற்றிய அலுவலகத்துக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
`விபத்தில் சிக்கிய இளைஞர்; 2 நாள்களுக்குப்பின் அதிர்ச்சி’ -தனிமைப்படுத்தப்பட்ட சென்னைக் காவலர்கள்

இதையடுத்து களப்பணியில் ஈடுபட்டுவருவோர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான், டி.ஜி.பி அலுவலகத்தில் உளவுத்துறை பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இ்தையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தபோது, ``களப்பணியாற்றும் காவலர்களுடன் உளவுத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு தொடர்பு ஏற்பட்டு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் காவலர்கள் குடியிருக்கும் பகுதி, அவர்கள் டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற இடங்கள் என ஏதாவது ஓர் இடத்தில் அவர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுதொடர்பாக காவலர்களின் டிராவல் ஹிஸ்ட்ரிகளை விசாரித்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - பிரேதப் பரிசோதனைக்குப் பின்னும் மர்மம்

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் சந்தித்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அவர்கள் பணியாற்றிய அலுவலகத்துக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே டி.ஜி.பி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் டிராவல் ஹிஸ்ட்ரி குறித்து விசாரித்தபோது ஊழியரின் தாய் மூலம் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அவரின் தாய்க்கு தனியார் மருத்துவமனை மூலம் பரவியுள்ளது. டி.ஜி.பி அலுவலக ஊழியரின் குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர், காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியதால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றனர்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

தமிழகத்தில் இன்று மட்டும் அதிகபட்சமாக 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு