Election bannerElection banner
Published:Updated:

சிராவயல் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் பலி!

சிராவயல் மஞ்சுவிரட்டு
சிராவயல் மஞ்சுவிரட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தை மூன்றாம் நாளான இன்று, மஞ்சுவிரட்டுக்குப் புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதி விமர்சையாக நடைபெற்றுவருகின்றன. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளும் சிறப்பாக நடைபெற்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க-வின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர்.

பலியானோர்
பலியானோர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தை மூன்றாம் நாளான இன்று, மஞ்சுவிரட்டுக்குப் புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சிராவயல் மஞ்சுவிரட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெகு விமர்சையாக நடைபெற்ற மஞ்சுவிரட்டில் வேடிக்கை பார்த்த போஸ் (60) என்பவருக்கும், பெரியகருப்பன் (64) என்பவருக்கும் மாடு முட்டியதில் படுகாயம் ஏற்பட்டது. இருவரும் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், மஞ்சுவிரட்டுப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள், பார்வையாளர்கள் என 52 நபர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிராவயல் மஞ்சுவிரட்டு
சிராவயல் மஞ்சுவிரட்டு

மேலும் மஞ்சுவிரட்டைப் காண்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தபோது திருப்பத்தூர் அருகே வாணியம்பட்டியில் நடந்த சாலை விபத்தில் காளையார்கோவில் அருகேயிருக்கும் குருந்தனி கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரும், சோலுடையான்பட்டியைச் சேர்ந்த குப்பன் என்பவரும் பலியாகினர். இந்தத் துயரச் செய்திகள் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு