Published:Updated:

”உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் சேகரிப்பு!”- இந்தியாவில் முதல்முறையாக விருதுநகரில் துவக்கம்

சந்தானகோபால்
News
சந்தானகோபால்

உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் நடவடிக்கையை இந்தியாவிலேயே முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

”உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் சேகரிப்பு!”- இந்தியாவில் முதல்முறையாக விருதுநகரில் துவக்கம்

உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் நடவடிக்கையை இந்தியாவிலேயே முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Published:Updated:
சந்தானகோபால்
News
சந்தானகோபால்

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் மையங்களின் செயல்பாடுகள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் துணை இயக்குனர் சந்தானகோபால் கள ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக நடந்த கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சந்தானகோபால், “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 128 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் இன்னும் சுமார் 28 லட்சம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட வேண்டியதுள்ளது. தமிழகத்தில் ஆதார் எண் பெறாதவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்தான். பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து தற்போதுவரை தமிழகத்தில் 770 பள்ளிகளுக்கு ‘ஆதார் கிட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

5 வயது முடிந்த பிறகும், 15 வயது முடிந்த பிறகும் தங்கள் குழந்தைகளின் கைரேகை, கருவிழிப்பதிவுகளை புதிப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவற்றைப் புதுப்பித்துக் கொள்ள 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. எனவே, 7 வயதிற்குள்ளும், 17 வயதிற்குள்ளும் பயோ மெட்ரிக்கை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பிக்காத ஆதார் எண்களில் உள்ள பயோமெட்ரிக் இடைநீக்கம் செய்யப்பட்டு, புதுப்பித்தபிறகு தானாக சேர்ந்து கொள்ளும்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

ஆதார் அட்டையை அனுமதி பெற்ற நிறுவனங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். பிற நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடாது. ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், வலைதளத்தின் மூலம் 16 இலக்கம் கொண்ட வெர்சுவல் எண்ணைப் பெற்று கொடுக்கலாம். ஆதார் அட்டையின் நகல்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு, தரவேண்டிய நிர்பந்தம் ஏதும் ஏற்பட்டால், ஆதாரிலுள்ள முதல் 8 எண்களை மறைத்துவிட்டு தரலாம். இதுவரை உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்படவில்லை. மக்களும் இதுகுறித்து முறையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, கடந்த 8 ஆண்டுகளில் இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை சேகரிப்பதை விருதுநகர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல்முறை.

ஆதார்
ஆதார்

இறந்தவர்களின் பதிவேடுகளை வைத்து உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் திரும்பப் பெற்று அந்த எண்கள் இடைநீக்கம் செய்யப்படும். ஒரு நபருக்கு தரப்படும் ஆதார் எண், 100 ஆண்டுகளுக்கு மற்றொருவருக்கு தரப்படாது. அனைவருக்கும் ஆதார் அவசியம் என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாகவும், குறுந்தகவல்கள், சமூக வளைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.