Published:Updated:

`மர்ம நபர் அழைப்பு; காவல்நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!' - உஷார்படுத்தப்படுத்தப்பட போலீஸ்

தூத்துக்குடி, நெல்லையில் குறிப்பிட்ட காவல் நிலையங்களில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி காவல்நிலையம்
தூத்துக்குடி காவல்நிலையம்

`தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என இன்று மாலை சென்னை, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், `தூத்துக்குடியில் வடபாகம் காவல் நிலையம், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் வெடிகுண்டு உள்ளது" எனச் சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டாராம் அந்த மர்ம நபர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களிலும் பாதுகாப்பை உஷார்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மிரட்டல் தொலைபேசி வந்த எண் குறித்த தகவல் சேகரிப்பில் இறங்கியது சைபர் கிரைம். இறுதியில், ``இது ரூமர் காலாகக் கூட இருக்கலாம்" என சொல்லப்பட்டதாம்.

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன்
தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன்
`திருமணம் ஆனவருடன் லிவிங் டுகெதர்; 40 லட்சம் கேட்டு மிரட்டல்!- சினிமா பாணியில் பெண்ணை பிடித்த போலீஸ்

இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கேட்டபோது, ``பொதுவான மிரட்டல் அழைப்பு தான் வந்துள்ளது. குறிப்பிட்ட எந்த காவல் நிலையத்துக்கும் மிரட்டல் வரவில்லை. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் உஷாராக இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார். இன்று மாலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வாட்ஸ்அப் குரூப்களில் `காவல்நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்' என்ற செய்தி மிகவேகமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.