Published:Updated:

சீர்காழியில் வரலாறு காணாத மழை... மிதக்கும் மயிலாடுதுறை மாவட்டம்!

மழை

``மேலும் மழை பெய்யும் என்பதாலும் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

சீர்காழியில் வரலாறு காணாத மழை... மிதக்கும் மயிலாடுதுறை மாவட்டம்!

``மேலும் மழை பெய்யும் என்பதாலும் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

Published:Updated:
மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. மயிலாடுதுறையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிக கனமழை பெய்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

செம்பனார்கோவிலில் 20 செ.மீ, கொள்ளிடத்தில் 19 செ.மீ, தரங்கம்பாடியில் 18செ.மீ., மணல்மேட்டில் 11 செ.மீ. மயிலாடுதுறையில் 16செ.மீ மழையும் பதிவானது. ஆனால், மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு,  43 செ.மீ மழை  பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீர்காழியின் பல பகுதிகள் தற்போது வெள்ளநீரில் மிதக்கின்றன. புதிதாக உருவான பல பகுதிகள்  ஏரிகள் போலவும், அவற்றில் இருக்கும் வீடுகள், மிதக்கும் வீடுகள் போலவும் காட்சியளிக்கின்றன. மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

கொள்ளிடம் வட்டாரத்தில் சம்பா, தாளடி மற்றும் நேரடி விதைப்பு நடவு பயிர் 13,000 ஹெக்டர் நிலப்பரப்பில் செய்யப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக கொள்ளிடம் பகுதியில் சுமாார் 15,000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். கொள்ளிடம் பூசை நகர், பாரத்சேகர்நகர், தைக்கால் மணிநகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 

மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சார சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு இயந்திரம் முதலில் திணறினாலும், தற்போது முழுவீச்சில் நிவாரணப்பணிகள் மற்றும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது

மழை
மழை

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் லலிதா பேசுகையில், ``மேலும் மழை பெய்யும் என்பதாலும் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது,  மின் கம்பங்களை தொடக்கூடாது, கொதிக்க வைத்த குடிநீரை அருந்த வேண்டும்" என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.