Published:Updated:

மதுரை: ``தீண்டத்தகாத சாதி எது?" - சர்ச்சைக்குரிய கேள்வி; தனியார் பள்ளி மீது புகார்

மதுரை

மதுரையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் நேற்று நடந்த 6-ம் வகுப்புக்கான பருவத் தேர்வில், `மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத சாதி எது?' என்று கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பட்டியல் சாதியினருக்கு எதிராக வன்முறைகள், இழிவுபடுத்தும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

வினாத்தாள்
வினாத்தாள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் சாதி அடிப்படையில் பல்வேறு தீண்டாமை சம்பவங்கள் நடந்துவரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் பட்டியல் சாதி குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் தற்போது தீண்டாமை குற்றம் புரிந்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை
மதுரை

இந்த நிலையில் மதுரையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் நேற்று நடந்த 6-ம் வகுப்புக்கான பருவத் தேர்வில், `மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத சாதி எது?' என்று கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோர்கள் சிலர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு,

வினாத்தாள்
வினாத்தாள்

``கேள்வியில் சர்ச்சைக்குரிய விஷயம் ஏதுமில்லை. என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே கேள்வி கேட்கப்பட்டுள்ளது" என்றனர்.