`கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகள் நடந்துவந்த நிலையில், கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் சம்பந்தமாக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோவை மாவட்டத்தில் மொத்தம் 139 கி.மீ தொலைவுக்கு, மூன்று கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக, அவிநாசி சாலை கருமத்தம்பட்டி வரையிலும்,

சத்தியமங்கலம் சாலையில் உக்கடத்திலிருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டப்படும். இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் செய்யப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களில், அதற்கு இணையாக மெட்ரோ இயக்கப்படும். இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் வசதி, மேல் பாலம்,

ஏற்கெனவே உள்ள சாலையைக் கடப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்து புதிய பகுதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் ஆய்வின் கீழ் எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.