Published:Updated:

ஆபரேஷன் 'T23': எட்டிப்பார்க்காத வனத்துறை அமைச்சர்; கொதிக்கும் நீலகிரி மக்கள்!

``இந்த புலியால பத்து நாளா இங்க இவ்வளோ பிரச்னை போயிட்டு இருக்கு. வனத்துறை அமைச்சர் என்ன ஆச்சுனுகூட ஒரு வார்த்தை கேக்கல"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உடலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக காட்டில் இரை தேட‌ முடியாத ஆண் புலி ஒன்று முதுமலையை விட்டு வெளியேறி கூடலூர் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தது. கடந்த 2 மாதங்களாக கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகளைத் தாக்கி வந்த அந்த ஆண் புலி, கூடலூர் தேவன் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை கடந்த வாரம் தாக்கிக் கொன்றது.

டைகர் 23
டைகர் 23

அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நூற்றுக்கணக்கான களப்பணியாளர்களுடன் களமிறங்கியது வனத்துறை. மேஃபீல்டு எஸ்டேட்டில் இரண்டு முறை அந்த புலி தென்பட்டும் கால்நடை மருத்துவர்களால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில்,நேற்று முன்தினம் நண்பகலில் மசினகுடி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாதன் என்ற பழங்குடி ஒருவரைத் தாக்கி அவரது உடல் பாகங்களைத் தின்றது.

மனிதர்களைத் தாக்கி வரும் அந்த புலி மேன் ஈட்டர் என்று சொல்லப்படும் ஆட்கொல்லியாக மாறியிருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். உடனடியாக அந்த புலியைச் சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி மசினகுடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த அழுத்தம் காரணமாக புலியை சுட்டுக் கொல்ல வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவே வனத்துறையினர் தேடுதல் வேட்டையை 9-வது நாளாக தொடர்ந்து வருகின்றனர்.

ஆபரேஷன் டி23
ஆபரேஷன் டி23
புலி
புலி

இதற்கிடையில் ஒரு வாரமாக நீலகிரியில் இருக்கும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு முறை கூட வந்து பார்வையிடவில்லை என உள்ளூர் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த கூடலூர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``இந்த புலியால பத்து நாளா இங்க இவ்ளோ பிரச்னை போய்கிட்டு இருக்கு. வனத்துறை அமைச்சர் என்ன ஆச்சுனுகூட ஒரு வார்த்தை கேக்கல. இத்தனைக்கும் ஒரு வாரமா ஊட்டியில்தான் இருக்கார். கூடலூர்,மசினகுடி மக்கள் எல்லாருமே உயிருக்கு பயந்து போராடிக்கிட்டு இருக்காங்க. உயிரைப் பணயம் வச்சி வனத்துறை களத்துல போராடிட்டு இருக்காங்க. ஊட்டியில தினமும் கொடி அசைச்சு அரசு‌ விழா நடத்திக்கிட்டு இருக்காரு. அந்தக் கட்சி ஆளுங்க எங்களை கேக்குற கேள்வியில வெளிய நாங்க தலை காட்ட முடியாம இருக்கோம்" எனப் புலம்பினார்

நீலகிரி: 2 மாதங்களில் 11 மாடுகள்; புலி தாக்கிக் கொல்லப்பட்ட மாட்டுடன் வனத்துறை அலுவலகம் முற்றுகை!
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

புலி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் வனத்துறை அதிகாரி ஒருவர், ``புலியை உயிருடன் பிடிக்கவே முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.கும்கி யானைகள், கண்காணிப்பு கேமிராக்கள், ட்ரோன் கேமிரா, கால்நடை மருத்துவர்கள், அதிரடிப்படை, காவல்துறை, வனத்துறையின் களப்பணியாளர்கள் என பெரும்படையுடன் களத்தில் இருக்கிறோம்.புலிகள் நிறைந்த முதுமலை காட்டில் நாம் தேடும் t23 புலியை கண்டறிவது கொஞ்சம் சவாலாக உள்ளது"என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு