Published:Updated:

`கூடங்குளம் சைபர் அட்டாக் விவகாரம் சரிவரக் கையாளப்படவில்லை!' - அமெரிக்கா அதிருப்தி?

கூடங்குளம் அணு உலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை மையத்தின் மீது வடகொரியா சைபர் அட்டாக் நடத்திய விவகாரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை என அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

`கூடங்குளம் சைபர் அட்டாக் விவகாரம் சரிவரக் கையாளப்படவில்லை!' - அமெரிக்கா அதிருப்தி?

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை மையத்தின் மீது வடகொரியா சைபர் அட்டாக் நடத்திய விவகாரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை என அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
கூடங்குளம் அணு உலை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் ரூ.17,270 கோடி மதிப்பீட்டில் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு அணு உலைகளுக்கான கட்டுமானம் மற்றும் உதிரிப் பாகங்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக அணு உலைக்கு எதிரான மக்கள் அமைப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர்.

kudankulam nuclear power plant
kudankulam nuclear power plant

கூடங்குளம் அணு உலைக்கு அருகே, அணுக்கழிவுகளைப் புதைத்து வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலையில் `சைபர் அட்டாக்’ நடந்துள்ளதாகத் தகவல்கள் பரவின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சைபர் அட்டாக் நடந்ததாக வெளியான தகவலை கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மறுத்த நிலையில், மறுநாளிலேயே (அக்டோபர் 30-ம் தேதி) இந்திய அணுசக்தித் துறை, அதை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், அணு உலை வளாகத்தின் இணையவழி ஊடுருவல் குறித்த தகவலை இந்தியா சரிவரக் கையாளத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

cyber attack
cyber attack

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்திய வெளியுறவு அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

இந்திய அதிகாரிகளுடன் ஆலோசித்த அமெரிக்க அதிகாரிகள், `அணு சக்தித் துறையில் சர்வதேச நடைமுறைகளை மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது. அதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்து வருவதுடன் உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இணையவழி ஊடுருவல் மேற்கொண்ட விவகாரத்தை இந்திய அரசு சர்வதேச நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். குறிப்பாக ஐ.நா சபைக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.