Published:Updated:

கொரோனா: `வெட்ட வெளியில் மருத்துவக் கழிவுகள்; இழுத்துச் செல்லும் குரங்குகள்!' - அச்சத்தில் ஊட்டி

used ppe kits
used ppe kits

ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரானா சிகிச்சை சிறப்பு மையத்தில் பாதுகாப்பு உடைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது, மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

நீலகிரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாவட்டம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகளிலும், ஊட்டி அருகில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

used ppe kits
used ppe kits

இந்தச் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என ஏற்கெனவே புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்போது கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற மருத்துவக் கழிவுகள் பொது வெளியில் கொட்டப்பட்டுள்ளதும், அவற்றைச் சில குரங்குகள் எடுத்துச் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அச்சத்தில் உறையச் செய்துள்ளது.

நீலகிரி: ஊசி ஃபேக்டரி; 500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு! - பின்னுக்குத் தள்ளப்பட்ட ஈரோடு, திருப்பூர்

இது குறித்து ஊட்டி மக்கள் கூறுகையில், ``கொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்களை இது போன்று பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் வீசுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. குரங்குகள் எடுத்துச் செல்கின்றன, அவற்றுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும், புதைக்கவோ, எரிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கின்றனர்.

used ppe kits
used ppe kits

நோய் பரவும் வகையில் வெட்டவெளியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து நீலகிரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

நீலகிரி: `இலக்கு 7,000 சோலை மரக்கன்றுகள்!' - வனங்களை மீட்டெடுக்கும் தோடர்கள்
அடுத்த கட்டுரைக்கு