Published:Updated:

``நிமோனியாவிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வழி தடுப்பூசிதான்" - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

Lungs
Lungs ( Image by kalhh from Pixabay )

``5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்குள் இறக்கின்றனர்.

நிமோனியா பாதிப்பால் இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் 5 வயதுக்குள் இறப்பதாகவும், அதேசமயம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் இதற்கான தடுப்பூசி மருந்து போடுவதன் மூலம் நிமோனியா பாதிப்பை 80 சதவிகிதம் கட்டுப்படுத்த முடியும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Photo: https://tiruvarur.nic.in/
Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிக் கால்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தைகளுக்கு முதல் தவணை நிமோனியா தடுப்பூசி போடும் முகாமை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் மற்றும் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்து, பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் கீதா, கோட்டாட்சியர் பாலசந்திரன், வட்டாட்சியர் தனசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிமோனியா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து உரையாற்றிய திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்குள் இறக்கின்றனர்.

திருவாரூர் ஆட்சியர்
திருவாரூர் ஆட்சியர்
கொரோனா பேரிடரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2.3 கோடி குழந்தைகள்! - தமிழகத்தின் நிலை என்ன?

நிமோனியா தடுப்பூசி மூலம் நிமோனியா பாதிப்பை 80 சதவிகிதம் கட்டுப்படுத்த முடியும். திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 15,130 குழந்தைகள் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் போடப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இதில் 1,260 குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6-வது வாரத்தில் தடுப்பூசி போடப்படுவதன் மூலம், நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு