Published:Updated:

'புதிதாக எதையும் செய்யவில்லை' - அறநிலைத்துறை நடவடிக்கைகளுக்கு வானதி சீனிவாசன் பதில்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இன்று எம்.எல்.ஏ அலுவலகத்தை பூஜை செய்து திறந்துவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “அறநிலையத்துறை அமைச்சர் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சொல்லியிருக்கிறார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
"100 ஆண்டு சமூகநீதிப் பயணத்தில் ஒரு மைல் கல்"-அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன்

'விஷ்வ ஹிந்து பரிஷத்' நீண்டகாலமாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சொல்லிவருகிறது. பல கோயில்களில் விருப்பப்பட்டால் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை உள்ளது.

மேல்மருவத்தூர் மற்றும் சமுதாயக் கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக பூஜை செய்துவருகின்றனர். கோவை பேரூர் ஆதீனம் பெண்களுக்கு ஆன்மிகப் பயிற்சியளித்து, அவர்கள் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். இதில் தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

உச்ச மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆகம கோயில்களில், ஆகம விதிப்படிதான் பூஜை செய்ய வேண்டும். இதில் பக்தர்களின் உணர்வு, கோயில் நிர்வாகத்தின் ஆலோசானையின்படி கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும்.

தி.மு.க இந்துக்களுக்கும், இந்து கடவுள்களுக்கும் எதிரானது என நான் சொல்லவில்லை. பல்வேறு சமயங்களில் அந்தக் கட்சியின் தலைவர்களேதான் இதைச் சொல்லியிருக்கின்றனர். இந்து சமய அற நிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானவையா, உண்மையானவையா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அவர்களின் கடந்தகால வரலாறு அப்படி. தமிழக அரசுக்கு உண்மையாகவே இந்துக் கோயில்கள் மீது அக்கறை இருந்தால் , கோயில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும். கோயில்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தங்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு