ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரமேஷின் உருவப் படத்துக்கு மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்திய பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ஆடிட்டர் ரமேஷ் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசிகளை, சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அதற்கான ஆதாரங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி விவரங்களை மத்திய அரசு அட்டவணையாகக் கொடுத்திருக்கிறது. மாநில அரசு தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்த வேண்டும்.

கோவையில் `ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளுக்காக கோயில்கள் இடிக்கப்படுகின்றன. `ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோயில்களை அழகுபடுத்தும் பணியை இணைத்துக்கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவ்வாறு முடியாத இடங்களில், கோயில்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டைத் தனியாக பிரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், கொங்கு மண்டல மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் போன்றவை பல ஆண்டுகளாக இந்த மக்களுக்கு ஏக்கமாகவே உள்ளன.

இந்த மாநில அரசு அவற்றையெல்லாம் எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதை வைத்துத்தான் கொங்கு நாடு விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம்” என்றார்.