Published:Updated:

``கோவை கார் வெடிப்பு தொடர்பாக 3 நாள்களாக மௌனம் காப்பது ஏன்?" - ஸ்டாலினுக்கு வானதி கேள்வி

வானதி சீனிவாசன்

``காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது." - வானதி சீனிவாசன்

``கோவை கார் வெடிப்பு தொடர்பாக 3 நாள்களாக மௌனம் காப்பது ஏன்?" - ஸ்டாலினுக்கு வானதி கேள்வி

``காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது." - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

கோவை கார் வெடிப்பு தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், கோவை கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

இதில் காரில் இருந்த ஜமேசா முபின் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜமேசா முபின் வீட்டில், காவல்துறை நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான அமோனியம் நைட்ரேட், பேட்டரி, இரும்பு ஆணிகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமேசா முபினை, ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு, கலவரங்கள் என, கோவை 25 ஆண்டுகளுக்கு பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த மாநகரம் கோவை.

ஜமேசா முபின்
ஜமேசா முபின்

கோவை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அதில் காயமடைந்தவர்களின் இன்னமும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். பெங்களூர், ஹைதராபாத், புனே போல பெரிய அளவில் தகவல் தொழில்நுட்ப நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய கோவை மாநகரின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே, இந்த கார் வெடிப்பு சம்பவத்தை, சிலிண்டர் வெடிப்பு என, சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது. இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையா... தீபாவளி கொண்டாடங்களை சீர்குலைக்க நடந்த சதியா... என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்து மூன்று நாள்களாகியும்,

ஸ்டாலின்
ஸ்டாலின்

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில்  ஸ்டாலின் நடந்த சம்பவத்திற்கு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும்.

1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று நாள்களாகியும் மெளனமாக இருப்பது கண்டனத்திற்குரியது. கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால், இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும்.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில், எவ்வித சமரசத்திற்கும் தி.மு.க. அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் வானதி சீனிவாசன்.