Published:Updated:

மனம் குமுறிய மாற்றுத்திறனாளி தம்பதியர்! - வாசகர்கள் ஆதரவுடன் உதவிக்கரம் நீட்டும் வாசன் அறக்கட்டளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெய்சங்கர்-சித்ரா தம்பதியர்
ஜெய்சங்கர்-சித்ரா தம்பதியர்

நோய்வாய்ப்பட்டிருக்கும் சித்ராவைப் பூர்ணமாக குணமடையச் செய்து, அவரின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சுவதற்காக நேயமிக்க வாசகர்களுடன் கைகோத்திருக்கிறது, வாசன் சாரிடபிள் டிரஸ்ட்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே எடத்தனூர்-தென்முடியனூர் கிராமக் கூட்டுரோடு பிரியும் ஜெ.பி.நகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள் ஜெய்சங்கர்-சித்ரா தம்பதியர். இருவருக்குமே வயது 31. ஜெய்சங்கர் மூன்றடி உயரமுடையவர். பிறக்கும்போதே வலது கால் வளைந்திருந்ததால், நடப்பதற்கே சிரமப்படுகிறார். அவரின் காதல் மனைவி சித்ரா, பிறந்ததிலிருந்தே எழுந்து நடந்தது கிடையாது. கால்களில் பிரச்னை... 31 ஆண்டுகளாகக் குழந்தையைப்போலத்தான் தவழ்கிறார். துயரம் தோய்ந்த இருவரையும் நம்பிக்கையை நோக்கி இணைத்தது, காதல்!

காதலுக்கு இருதரப்புப் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் 2015, ஏப்ரல் 6-ம் தேதி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டனர்.

ஒயர்க்கூடை பின்னுகிறார்கள்
ஒயர்க்கூடை பின்னுகிறார்கள்

இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய நாள் முதல் இப்போது வரை அவர்கள் வசிக்கும் சின்னஞ்சிறு வீடெங்கும் துயரத்தின் இருள் கவிழ்ந்திருக்கிறது. அந்த அடர்ந்த இருளிலும் நம்பிக்கை விளக்காக ஒளிரச்செய்தது, பாலகன் `தீபன்.’ குழந்தைக்கு மூன்று வயதாகிறது. இந்தச் சூழலில், சித்ரா தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடல்பருமன் ஏற்பட்டு, முடக்குவாதமும் ஏற்பட்டதால் சித்ரா படுத்த படுக்கையாகிவிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் எழுந்து உட்கார ஆரம்பித்திருக்கிறார். இருந்தபோதும், நோயிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறார்.

நோய்வாய்ப்பட்ட மனைவியை அருகிலிருந்து கவனித்துக்கொள்கிறார் ஜெய்சங்கர். மனைவியின் காலைக் கடன்களை சுத்தப்படுத்தி, குழந்தையைப்போல் பார்த்துக்கொள்கிறார். இருவரும் வீட்டிலிருந்தபடியே ஒயர்க்கூடை பின்னும் தொழிலைச் செய்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு பைகூட விற்பனையாவதில்லை. இதனால், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுவருகிறார்கள். இப்படியான சூழலில், சித்ராவின் மருத்துவச் செலவுக்கும் பணம் இல்லாததால், அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிவருகிறது.

ஜெய்சங்கருடன் அவரின் குழந்தை
ஜெய்சங்கருடன் அவரின் குழந்தை

இந்த நிலையில், 6.1.2021 தேதியிட்ட `ஜூனியர் விகடன்’ இதழில் ``அன்பா இல்லைன்னாலும் ஒதுக்காம இருங்க...’’ மனம் குமுறும் மாற்றுத்திறனாளி தம்பதியர்’’ என்ற தலைப்பில் ஜெய்சங்கர்-சித்ரா தம்பதியர் படும் துயரத்தை மூன்று பக்கக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். கட்டுரையில், ``உடம்புல குறைங்கிறதால குடும்பமும் சமூகமும் எங்களை ஒதுக்கிடுச்சு. ஒயர்க்கூடை பின்னி அரை வயிறு பசியாத்திக்கிறோம். கிடைக்கிற கொஞ்ச நஞ்ச வருமானமும் மருந்து, மாத்திரைக்கே சரியாப்போயிடுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`உதவி வேண்டுமா... உதவ விருப்பமா?’ - விகடனோடு இணையுங்கள் #NivarVikatanHelp

`ஒதுக்கப்பட்ட ஏழைக்குக் கைக்கூலி காயம்தான்’னு நெதமும் கத்துக்கொடுக்குது இந்த உலகம்... தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனைக்கிறப்பல்லாம் குழந்தை முகத்தைப் பார்த்து உசுரை மீட்டுக்குறோம்’’ என்று பால்முகம் மாறாத பாலகனை இழுத்தணைத்து, உச்சிமுகர்ந்தபடியே ஜெய்சங்கர் உளக் குமுறல்களைக் கொட்டியிருந்தார்.

கட்டுரை வெளியான நிலையில், பலத்தரப்பிலிருந்தும் `விகடன்’ வாசகர்கள் சிகிச்சைக்குத் தேவையான பண உதவிகளை செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள். இதையடுத்து, விகடனின் வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டும் ஜெய்சங்கர்-சித்ரா தம்பதியரை உதவிக்கரம் நீட்டி அரவணைத்திருக்கிறது. தைராய்டு, முடக்குவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சித்ராவைப் பூர்ணமாக குணமடையச் செய்து, அவரின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சுவதற்காக நேயமிக்க வாசகர்களுடன் கைகோத்துள்ளது வாசன் சாரிடபிள் டிரஸ்ட்.

சித்ராவுக்கு உணவூட்டும் பாலகன்
சித்ராவுக்கு உணவூட்டும் பாலகன்

உதவும் உள்ளம் கொண்டவர்கள் `Vasan Charitable Trust’ என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்க்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோட்: IDIB000C032, ஸ்விப்ஃட் கோட்: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `ஜெய்சங்கர் குடும்பத்துக்காக’ அல்லது `For Jaishankar’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை `help@vikatan.com’ என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பிவைக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு