Published:Updated:

பேரன் பேத்திகள் துணையுடன் பள்ளிக்கு வரும் முதியோர்... சர்ப்ரைஸ் கொடுத்த ஆசிரியர்!

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராம ஞானாம்பிகா பள்ளிக்கூடத்தில் 'கற்போம் எழுதுவோம் ' என்ற திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கல்வி கற்க வயது எப்போதும் ஒரு தடையாக இருக்கமுடியாது என்பதுதான் தமிழகம் சொல்லும் செய்தி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு முறைசாரா கல்வி, வயது வந்தோர் கல்வி, முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம் எனப் பல்வேறு திட்டங்களின் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு தமிழகம் முழுவதும் 'கற்போம்-எழுதுவோம்' என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் நடைபெறும் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின்மூலம் படிக்கவந்த முதியோருக்கு ஆசிரியர் ஒருவர் கொடுத்த சர்ப்ரைஸ் ஊர் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராம ஞானாம்பிகா பள்ளிக்கூடத்தில் 'கற்போம் எழுதுவோம்' என்ற திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வி
கல்வி

எழுதப்படிக்க தெரியாத சுமார் 30 தாத்தா, பாட்டிகள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் கல்வி பயின்றும், 'அ, ஆ...' எழுதி பார்த்தும், பாட்டுக்களை பாடியும், தங்களது பெயர்களை எழுதியும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்பள்ளிக்கு தாத்தா, பாட்டிகளை பேரன், பேத்திகள்தான் அழைத்து வருகின்றனர்.

கல்வி அறிவு இல்லாமல் கை ரேகை வைத்த இந்த முதியவர்கள், தங்களின் ஓய்வு காலத்தில் தங்கள் பெயரை தாங்களே எழுதுவதைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

இப்போது மழைக்காலம் என்பதால், மழையால் முதியவர்களின் வருகை நின்றுவிடக்கூடாது என பள்ளிக்கு வரும் 30 முதியோர்களுக்கும் குடைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் வசந்தா.

வாழ்த்துகள் வசந்தா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு