Published:Updated:

`எனக்கு மட்டும் ஏன் 2 ஊசி போட்டாங்க?' - ஊழியர்களின் அலட்சியம்; கலங்கும் நாகை மூதாட்டியின் குடும்பம்

அலமேலு
அலமேலு

``எல்லாருக்கும் ஒரு ஊசி போடுறாங்க, எனக்கு மட்டும் ஏன் ரெண்டு ஊசி போட்டாங்க?" என்று அப்பாவியாய்க் கேட்டிருக்கிறார் பாட்டி. அங்கிருந்தவர்கள் பதறி முகாமில் விசாரிக்க, அவர்கள் ஒரு ஊசிதான் போடப்பட்டது என்று மறுத்திருக்கிறார்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி கிராமம் பெரியதிடல் பகுதியைச் சேர்ந்த நாகப்பனின் மனைவி அலமேலு (70). விவசாயக் கூலித்தொழிலாளியான அலமேலு அப்பகுதியிலுள்ள சரபோஸிராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சென்றுள்ளார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
''ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வந்துடுச்சு'' - நடிகை நதியா!

பெண்கள் வரிசையில் சென்ற மூதாட்டிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவுடன், அவரை நிழலில் அமர செய்துள்ளனர். ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்ட போது, அங்கிருந்தவர்கள் நிழலில் அமர்ந்திருந்த அலமேலுவையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.

இதனால் மூதாட்டி அலமேலுவிற்கு தவறுதலாக இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. ``எல்லாருக்கும் ஒரு ஊசி போடுறாங்க, எனக்கு மட்டும் ஏன் ரெண்டு ஊசி போட்டாங்க?" என்று அப்பாவியாய்க் கேட்டிருக்கிறார் பாட்டி. அங்கிருந்தவர்கள் பதறி முகாமில் விசாரிக்க, அவர்கள் ஒரு ஊசிதான் போடப்பட்டது என்று மறுத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து பாட்டி அலமேலு தன் வீட்டிற்கு வந்துவிட்டார். அலமேலு தன் மகனிடம், ``எனக்கு இன்னைக்கு ரெண்டு ஊசி போட்டுட்டாங்க" எனத் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அலமேலுவின் மகன், உடனடியாக அவரை அந்த முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த விசாரணையில் அலமேலுவிற்கு தவறுதலாக இரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.

அலமேலு
அலமேலு
கொரோனா: 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் தேவையா?

இதை தொடர்ந்து அலமேலு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.

மூதாட்டி அலமூலுவிடம் பேசியபோது, ``எனக்கு ஒண்ணும் பண்ணல, நல்லாதான் இருக்கேன்" என்றார். அலமேலுவுக்கு ஒரே நாளில் இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் அவர் உடல்நிலை பாதிக்கப்படுமோ என்று குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர். ``தொடர்ந்து அம்மாவை கண்காணிச்சுட்டே இருக்கோம்'' என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு