Published:Updated:

``போலீஸாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கலை"- வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

என் கணவரின் அண்ணன் மாதையன் உட்பட சிறையில் இருக்கும் நான்கு பேரையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இன்று வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் முத்துலட்சுமி கூறுகையில், ``தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மக்களுக்காக வைக்கும் கோரிக்கை, திட்டங்களை தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. சதாசிவம் கமிட்டி கூறியபடி வீரப்பன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என சேலம் மாநாட்டில் கோரிக்கை வைத்திருக்கிறோம். என் கணவரின் அண்ணன் மாதையன் உட்பட சிறையில் இருக்கும் நான்கு பேரையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக தமிழகம் 2.4 கோடி ரூபாய், கர்நாடக அரசு 2.4 கோடி ரூபாய் ஏற்கெனவே கொடுத்திருக்கிறார்கள்.

குமரி மாவட்டம் வந்த முத்துலட்சுமி
குமரி மாவட்டம் வந்த முத்துலட்சுமி
பன்னீரின் மணிமண்டபக் கோரிக்கை முதல் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய கட்சி நிர்வாகி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

ராஜ்குமார் கடத்தலின்போது தமிழக அரசு ஐந்து கோடி ரூபாயும், கர்நாடகா அரசு ஐந்து கோடி ரூபாயும் கொடுப்பதாகத்தான் கூட்டிக்கொண்டு வந்தனர். சதாசிவம் கமிஷன் அமைச்சு அந்தப் பணத்தை கொடுப்பதாகச் சொன்னாரகள். அது முழுமையாக இன்னும் நிறைவேறவில்லை. அந்த விசாரணையைப் பாதியில முடிச்சு ஹியூமன் ரைட்ஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கலாம் என தற்போது நேஷனல் ஹியூமன் ரைட்ஸ் கூறியிருக்கிற. ஆனால் அந்த நிவாரணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மூலமாக, தமிழக அரசுக்கு அந்தக் கோரிக்கையை வைக்கவிருக்கிறோம்.

நான் மலை சார்ந்து வாழ்ந்ததுனால, மலைவாழ் மக்களுக்கு தாவது செய்யணும்னு `மலைவாழ் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தினேன். அரசியல் சூழ்ச்சி காரணமாக என்னைச் சிறையில் அடைத்தனர். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டேன்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

நான் அரசியலில் வளரக் கூடாதென்கிற காழ்ப்புணர்ச்சியால் என்னை மைசூர் சிறையில் மூன்று ஆண்டுகள் அடைத்தனர். அதன் பிறகு அந்த இயக்கத்தை நடத்த முடியாததால் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு