Published:Updated:

`நாளை முதல் கொரோனா பரிசோதனை!’ - ஏழை மக்களுக்காக இரங்கும் வேலூர் சி.எம்.சி #corona

சி.எம்.சி மருத்துவமனை
சி.எம்.சி மருத்துவமனை

வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், `கொரோனா’ பரிசோதனை மையம் நாளை முதல் செயல்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே `கொரோனா’ பரிசோதனை மையம் செயல்பட்டுவந்தது. `கொரோனா’ பெருந்தொற்று அச்சத்தின் காரணமாக சாதாரண சளி, இருமல் உள்ளவர்களும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக அரசு மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இதனால், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி, வேலூரில் உள்ள புகழ்பெற்ற சி.எம்.சி தனியார் மருத்துவமனையிலும் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அஷ்வின் செய்த மன்கட் விக்கெட் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும்..? - காரணம் `கொரோனா’

`கொரோனா’ வைரஸ் பரிசோதனைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை மொத்தமாகச் செலுத்த தேவையில்லை. ஆரம்பகட்ட சோதனைக்கு ரூ.1,500-ம், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தும் சோதனையின்போது 3,000 ரூபாயைக் கொடுக்கலாம்.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

எனினும், நிர்ணயித்த கட்டணத்தைவிடக் குறைவாகவோ, இலவசமாகவோ பரிசோதனை மேற்கொள்ளத் தனியார் மருத்துவமனைகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நாளை முதல் சி.எம்.சி மருத்துவமனையில் `கொரோனா’ பரிசோதனை மையம் செயல்பட உள்ளது.

இதுபற்றி சி.எம்.சி நிர்வாகத்தில் விசாரித்தபோது, ``எங்கள் மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களிடம் கொரோனா பரிசோதனைக்காகக் கட்டணத்தைக் குறைவாகப் பெறுவோம். தேவைப்படும்பட்சத்தில் இலவசமாகவும் செய்வோம்.

சி.எம்.சி மருத்துவமனை
சி.எம்.சி மருத்துவமனை

இது சம்பந்தமாக, ஏற்கெனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எங்கள் மருத்துவமனையின் இயக்குநர் தெளிவுபடுத்தியுள்ளார். நேற்று அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், நாளை முதல் பரிசோதனை மையம் இயங்க இருக்கிறது’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு