Published:Updated:

`வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் மாவட்டத்தில், `டெங்கு’ கொசுப் புழு உருவாகக் காரணமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களிடம், 50 சதவிகிதம் சொத்து வரியை அபராதமாக வசூலிக்க, கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கொசு
கொசு

வடிவேலு பாணியில், ``ஒரு சிறிய புறாவுக்குப் போரா... பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கின்றது’’ என்பதைப் போல் வேலூர் மக்களைப் புலம்பவிட்டுள்ளார், கலெக்டர் சண்முக சுந்தரம். 

வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளம்
வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளம்

காரணம், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு, ஆங்காங்கே குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் டெங்கு கொசு உருவாகும் நிலை உள்ளது.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் அதிகாரிகளுடனான டெங்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் சண்முக சுந்தரம்
கலெக்டர் சண்முக சுந்தரம்

இதில் பேசிய கலெக்டர், ``டெங்கு காய்ச்சலைத் தடுக்கப் பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு கொசுப் புழு உருவாகக் காரணமாக இருப்பவர்களுக்கு முதலில் நோட்டீஸ் தர வேண்டும்.

கேட்காவிட்டால், அவர்களுக்குச் 50 சதவிகிதம் சொத்துவரியை உயர்த்த வேண்டும். பிறகு, குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். கடைகளுக்கு 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

கொசு
கொசு

கட்டுமானப் பணியிடங்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். மாவட்டத்தில் யாரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படக் கூடாது. அபராத நடைமுறையை உடனே அமல்படுத்துங்கள்’’ என்றார். கலெக்டரின் இந்த அதிரடி அறிவிப்பால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.