Published:Updated:

`அலட்சியம் வேண்டாம்!’ - பைக்குகளில் அவசரப் பயணம் எதற்கு? #corona

வேலூர்
வேலூர்

நோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்கள் அலட்சியமாக பைக்குகளில் சுற்றுவது வேதனையளிப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இன்று காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தண்டோரா அடித்தும் ஒலிபெருக்கி மூலமாகவும், `வீடுகளிலிருந்து வெளியில் வராதீங்க...’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர்
வேலூர்

வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்பதால், வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் அவசர அவசரமாக பைக்குகளில் சொந்த ஊர் திரும்பினர். அதேபோல், வேலூரில் தங்கியிருந்த வெளியூர் நபர்களும் பைக், கார்களில் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

போக்குவரத்து விதிகளைப் பற்றி கவலைப்படாமலும், ஹெல்மட் அணியாமலும், இரண்டு மூன்று பேராக பைக்குகளில் செல்கிறார்கள். காவல் துறையினரும் பொறுமையாக ஆலோசனை கூறுகிறார்கள். ஆனாலும், வெளியில் சுற்றுவதை மக்கள் தவிர்க்கவில்லை. காவல் துறையினரை சாலையில் பார்த்தால், அருகில் உள்ள சந்துகளில் புகுந்து செல்கிறார்கள்.

வேலூர்
வேலூர்

``அரசின் தடை உத்தரவு, விடுமுறை இல்லை. பயணத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக இருப்போம் என்று அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சமூக விலகலை கடைப் பிடிக்காமல் பெரும்பாலானோர் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது’’ என்கிறார்கள் அதிகாரிகள்.

144 தடை அமலுக்கு வந்ததால், வெளியில் நான்கு பேருக்கு மேல் கூடியிருந்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, கூட்டமாகப் பயணித்து கொரோனாவுக்கு உதவாமல், நோய் பரவலைத் தடுக்க உறுதியேற்போம்.

வேலூர்
வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் அருகருகில் இருந்தாலும் அதன் எல்லைகளும் இன்று மாலை அடைக்கப்பட்டது. அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்தும் வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு