Published:Updated:

`25 பைசாவுக்குப் பிரியாணி வாங்கிய 200 பேர்!’ -வேலூர் மக்களை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்

வேலூரில், 25 பைசாவுக்கு பிரியாணி என்று விளம்பரப்படுத்திய ஹோட்டலில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

பிரியாணி வாங்கக் குவிந்த கூட்டம்
பிரியாணி வாங்கக் குவிந்த கூட்டம்

வேலூரில், ஆரணி சாலையோரம் ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம் என்ற பெயரில் இன்று புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இதையொட்டி, அவர்கள் வெளியிட்ட விளம்பரம், அசைவ பிரியர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

விளம்பரம்
விளம்பரம்

‘25 பைசா கொண்டுவருபவருக்கு பிரியாணி பார்சல் வழங்கப்படும். காலை 11 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இந்த அறிவிப்பு. ஒரு நபர் ஒரே முறைதான் பிரியாணியை வாங்க முடியும்’ என்று விளம்பரப்படுத்தியிருந்தனர்.

`அட, இதுல பெரிய சதி எல்லாம் இல்லீங்க..!' - `5 பைசா’ பிரியாணி ரகசியம் சொல்லும் தொப்பி வாப்பா

இதைப் பார்த்த பொதுமக்கள் 25 பைசாவுடன் இன்று காலை ஹோட்டலில் குவிந்தனர். 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் 25 பைசாவுடன் வந்திருந்தனர்.

பிரியாணி வாங்கக் குவிந்த கூட்டம்
பிரியாணி வாங்கக் குவிந்த கூட்டம்

பிறகு, 200 பேரிடம் 25 பைசாவை வாங்கிக் கொண்டு பிரியாணி பார்சலை வழங்கினர். சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கூட்டம் முண்டியடித்ததால் ஆரணி சாலையில் சென்ற பொதுமக்கள் ‘ஹோட்டலில் என்ன நடக்கிறது?’ என்று தெரியாமல் உற்றுப் பார்த்தனர்.

ஹோட்டல் உரிமையாளர் ரவியிடம் பேசினோம். ‘‘இதே பகுதியில் சின்னதா ஒரு ஹோட்டல் நடத்திக்கிட்டு இருந்தேன். அசைவம், சைவ உணவுகளை வீட்டுமுறையில் தயார் செய்து பரிமாறியதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

25 பைசாவுக்கு பிரியாணி
25 பைசாவுக்கு பிரியாணி

நல்ல லாபம் கிடைத்ததால் பெரிய ஹோட்டலை இன்று திறந்தேன். ஒரு விளம்பரத்துக்காக 25 பைசாவை அறிவித்தோமே தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் இல்லை. செல்லாக்காசாக இருந்தாலும் எங்களின் முதல் வருமானம் 25 பைசாதான்’’ என்றார் பெருமிதமான குரலில்.