Published:Updated:

`எம்.ஜி.ஆருக்கு தி.மு.க கொடி வைத்து அஞ்சலி!’ - சமூக வலைதளத்தில் டிரெண்டான வேலூர் தொண்டர்

எம்.ஜி.ஆர் படத்துக்கு தி.மு.க-வின் கொடியை வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க கொடி வைத்து அஞ்சலி
தி.மு.க கொடி வைத்து அஞ்சலி

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மேல் முட்டுக்கூர் ஊராட்சி தட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு (46). அப்பகுதியில், இறைச்சி கடை வைத்துள்ளார். தி.மு.க-வைச் சேர்ந்த அவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அவரின் படம் உள்ள பேனரைத் தன் கடைக்கு முன்னால் வைத்து மரியாதை செலுத்துவார். தவிர, தி.மு.க-வின் கொடியையும் எம்.ஜி.ஆர் பேனர் முன்பு வைத்துவிடுவார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! - மார்டன் தியேட்டர்ஸின் கதை

நேற்று எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால் வழக்கம்போல் அவரின் பேனரை வைத்து கறுப்பு சிவப்பு நிறமுடைய தி.மு.க-வின் கொடியை பேனரில் கட்டி வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தி.மு.க கொடி வைத்து அஞ்சலி
தி.மு.க கொடி வைத்து அஞ்சலி

தி.மு.க கொடியுடன் எம்.ஜி.ஆரின் பேனரை பார்த்த அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் `இதில் தவறு ஏதுமில்லை’ என்று வாசுவை வாழ்த்திவிட்டுச் சென்றனர். பொதுமக்களும் ஆச்சர்யமுடன் பார்வையிட்டனர்.

இதுபற்றி, வாசுவிடம் கேட்டதற்கு, `அடிப்படையில் நான் தி.மு.க தொண்டன். ஆனாலும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைப் பார்த்தாலே மெய்மறந்து நின்றுவிடுவேன்.

 வாசு
வாசு

தி.மு.க-வின் கொடியை வைத்து வணங்கியதற்கு யாரும் என்னைத் திட்டவில்லை. அனைத்து தரப்பினருமே மகிழ்ச்சியடைந்தனர்’ என்றார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Vikatan