Published:Updated:

டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி; வேலூர் மலை கிராம மக்களைத் தொடரும் துயரம்!

டோலி கட்டித் தூக்கிச்செல்லப்படும் கர்ப்பிணிப் பெண்

சாலை வசதி இல்லாததால், டோலி கட்டித் தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, மலைகளின் வழியில் சென்றுகொண்டிருந்தபோதே பனிக்குடம் உடைந்து பிரசவிக்கும் நிலை ஏற்பட்டது.

டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி; வேலூர் மலை கிராம மக்களைத் தொடரும் துயரம்!

சாலை வசதி இல்லாததால், டோலி கட்டித் தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, மலைகளின் வழியில் சென்றுகொண்டிருந்தபோதே பனிக்குடம் உடைந்து பிரசவிக்கும் நிலை ஏற்பட்டது.

Published:Updated:
டோலி கட்டித் தூக்கிச்செல்லப்படும் கர்ப்பிணிப் பெண்

வேலூர் மாவட்டம், ஊசூர் அருகிலிருக்கிறது, குருமலை என்கிற மலை கிராமம். இதனைச் சுற்றிலும் நச்சிமேடு, வெல்லக்கல், பள்ளக்கொல்லை உட்பட சில மலை கிராமங்களும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வசதிகளை குறைந்தளவுக்கூட செய்துத்தரவில்லை என்பதுதான் ஆட்சியாளர்கள் மீது வைக்கப்படும் நெடுங்காலக் குற்றச்சாட்டு. சாலை வசதியில்லை என்பதால், கரடு முரடான பாதைகளைத்தான் பயன்படுத்த வேண்டிய அவலநிலை காணப்படுகிறது. அத்தியவாசியத் தேவைக்கு மலையிலிருந்து கீழுள்ள பகுதிகளுக்கு வந்து செல்வதற்குள் பாதங்கள் பொத்தலாகின்றன என்கிறார்கள் மக்கள்.

கர்ப்பிணி பெண்
கர்ப்பிணி பெண்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பாக, இம்மக்களுக்குக் கல்வியும், மருத்துவ வசதியும் கிடைக்காததுதான் துயரிலும் பெருந்துயரம். பாம்புக்கடி, மாரடைப்பு, பிரசவ வலி உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவையெனில், பாதிக்கப்பட்டவரை டோலி கட்டித் தூக்கிக்கொண்டும், முதுகில் சுமந்துகொண்டும் மலையடிவாரத்தை வந்தடைவதற்குள் மரணமே நிகழ்ந்துவிடுகிறது. மலை அடிவாரத்தை வந்தடைந்துவிட்டாலும் அங்கிருந்து ஊசூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு சென்றாலும், முதலுதவி சிகிச்சை மட்டுமே கிடைக்கிறது என்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019-2020-ம் நிதியாண்டில், சிவநாதபுரம் கல்லாங்குளம் என்ற பகுதியிலிருந்து மலை கிராமங்களுக்குச் செல்ல சாலை அமைக்க ரூ1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதுடன் சாலைப் பணி முடங்கியதாக குமுறுகிறார்கள், மலை கிராம மக்கள். இந்நிலையில், குருமலை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி பவுனுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக டோலி கட்டிய உறவினர்கள், அதில் பவுனைப் படுக்க வைத்துத் தூக்கிக்கொண்டு வேக வேகமாக மலையிலிருந்து கீழே இறங்கினர்.

மலை அடிவாரத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்
மலை அடிவாரத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்

நடுமலையில் இறங்கிக் கொண்டிருந்தபோது, பனிக்குடம் உடையும் நிலை தெரிந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு ஆட்டோ ஒன்றை வரவழைத்து கரடு முரடான குறுகிய பாதையிலேயே மலை அடிவாரத்துக்கு விரைவாகக் கொண்டுச் செல்ல முயன்றனர். அதற்குள்ளாக, பனிக்குடம் உடைந்து ஆட்டோவிலேயே பவுனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மலை அடிவாரத்துக்குச் சென்று அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸில் தாயும், சேயும் ஏற்றப்பட்டு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். நல்ல வேளையாக தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். என்றாலும், இந்தப் பயணத்தால் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே, மலை கிராமங்களுக்கு விரைவாக சாலை வசதி, துணை சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள், மலை கிராம மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism